திருவருகைக்காலம்; 'செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே'

திருவருகைக் காலத்துக்குள் நுழைந்து, புதிய திருவழிபாட்டு ஆண்டைத் தொடங்குகிறோம். அத்தோடு, நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழாவை கொண்டாட நம்மை நாம் தயாரிக்க உள்ளோம்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள். இறைவாக்கு வழிபாடு கடந்த ஞாயிறை நம்பிக்கை ஞாயிறாக நமக்கு தருகின்றது. கிறிஸ்தவ வாழ்வு நல்ல முறையில் அமைய வேண்டுமெனில் அங்கு அடிப்படையாகத் தேவை நம்பிக்கை என்பது.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வு சோபிக்காமல் போனதற்கு அடிப்படைக் காரணம் நாம் நம் நம்பிக்கையில் ஆழப்படவில்லை. நமது நம்பிக்கை ஆழப்பட்டிருந்தால் அது நமது தனிப்பட்ட வாழ்வையும் அதே வேளையில் நம் சமய வாழ்வையும் நிச்சயம் மாற்றியிருக்கும்.

இந்த நம்பிக்கை ஞாயிறு எப்படியிருக்கிறது எனில்இ திருத்தூதர் யோவான், நம்பிக்கையில் தளர்ந்திருந்த இரண்டாம் தலைமுறைக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்த அவர்களின் நம்பிக்கையை கூறுபோட்டுப் பார்க்க, அவர்களின் தவறான புரிதல்களைக் களைய, இயேசுவைப் பற்றி சான்று பகர யோவான் நற்செய்தி, திருவெளிப்பாடு போன்ற நூல்களை எழுதி ஆழப்படுத்தியது போல இந்த ஞாயிறு இறைவாக்கு வழிபாடு உள்ளது.

எந்தவொரு விழாவுக்கும் நாம் தெளிவாக திட்டமிட்டாலும், அது நல்லமுறையில் நடந்தாலும் அது நடந்து முடிந்தபின் அந்த விழா பற்றி நாம் நிச்சயம் ஆய்வு செய்வோம். காரணம் எதுவாக இருந்தாலும் சுய ஆய்வு இன்னும் நல்ல முறையில் செய்ய உத்தவேகத்தை தரும் என்பதாலே. அதுபோல நமது நம்பிக்கை வாழ்வும் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு அமையாததே நமது நம்பிக்கை தளர் வுற்றதற்கு காரணம்.

இன்றைய முதல் வாசகம் அதனையே நமக்கு தெளிவுப்படுத்துகிறது. இது எழுதப்பட்ட காலமானது கி.மு. 587ஆக இருக்கலாம். இந்தக் காலம் அவர்கள் பாபிலோனிய அடிமைத் தளையிலிருந்து விடுதலையடைந்த காலம். அடித்தனத்திலிருந்து மீண்டு வந்த மக்கள் தங்களை சுய ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். எப்படி சுய ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் .

கேள்விகளாக எழுப்புகின்றனர் - கடினப்படுத்தியது ஏன்? - இறங்கி வரமாட்டிரா? - நாங்கள் மீட்கப்படுவது எங்கனம் என்றெல்லாம் கேள்வியெழுப்பி பின் சொல்லுகின்றனா நாங்கள் தீட்டுப்பட்டவரைப் போல உள்ளோம் - அழுக்கடைந்த ஆடைகள் போல் ஆயின - இலைபோல் கருகிப் போயின என தங்கள் நிலை அறிந்தவாகளாய் அறிக்கையிடுகின்றனர்.

இவ்வாறு சுயஆய்வு செய்து அதன்பலனாய் பெறுவதுதான் “ஆண்டவரே நீரே எங்கள் தந்தை: நாங்கள் களிமண்: நீ ர் எங்கள் குயவன்: நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே” எனும் அறிக்கை. இதுதான் சுயஆய்வு இட்டுச் செல்லும் பாதை. இஸ்ராயேலர்களின் சுயஆய்வு சர்யான திசையில் பயணித்தது. ச ரி யான பலனையும் பெற்றார்கள். இதனைத்தான் விடுதலைப் பயணத்திலும் பார்க்கிறோம். எகிப்திய அடிமைகளாக துன்புற்றவர்கள் தங்கள் நிலை அறிந்து கண்ணிரோடும், கவலையோடும் கடவுளை நோக்கி கூக்குரல் எழுப்பினர்.

இறைவன் அவர்களுக்கு செவிசாய்த்தார் என்பதை விடுதலைப்பயணம் 3:7 நமக்கு கூறுகிறது. நமது சுய ஆய்வுக்கும் தகுந்த பதிலுண்டு.

நற்செய்தி வாசகத்தில் நம் நம்பிக்கையைக் காத்துக் கொள்ள விழிப்பாகவும், கவனமாகவும் இருங்கள் என இயேசு அழைப்பு கொடுக்கிறார். ஏனெனில் நமது நம்பிக்கையைக் கெடுக்க அலகை நம்மைச் சுற்றி வருகிறான்.

ஆனால் நாம் நமது நம்பிக்கையைக் காத்து நம்முன்னோரைப் போல “நம்பிக்கையினாலேயே இவர்கள் அரசுகளை வென்றார்கள். நே ர் மையாகச் செயல்பட்டார்கள்: கடவுள் வாக்களித்ததைப் பெற்றார்கள்: சிங்கங்களின் வாயை அடைத்தார்கள் (எபி 11:33). காரணம் இந்த நம்பிக்கையினால்தான் நம்மூதாதையர்கள் நற்சான்று பெற்றார்கள் (எபி11:2). நாமும் அந்த நம்பிக்கையைக் காத்துக் கொள்ளவே இயேசு அழைக்கிறார். நமது கவனமானது வீட்டுக்காவலன், வெளியே போன தன் தலைவன் எந்நேரம் வருவார் எனத் தெரியாவிட்டாலும், தான் அயர்ந்திருக்கும் போது அவர் வந்துவிடக் கூடாது என்பதின் பொருட்டு மிகக் கவனமாய் கண்விழித்து காத்திருப்பது போல நாமும் நமது நம்பிக்கை சூறையாடப்படவிடாமல், பாதுகாப்பாய் இருக்க பாதுகாப்பது நமது கடமை.

திருவருகைக் காலத்தின் முதல் நாளிலே நமது நம்பிக்கையானது எந்த நிலையில் உள்ளது? அதனை பரிசோதித்து காத்துக் கொள்ள முயலுங்கள் எனும் அழைப்பினை நமக்குத் தருகிறார் நம் ஆண்டவர் நம்பிக்கைதான். நாம் திருமுழுக்கு பெற்றது நாம் அல்லது நமது சார்பாக நமது பெற்றோர் அறிக்கையிட்ட நம்பிக்கையினாலேதான். திருமுழுக்கின் போது தரப்பட்ட எரி யும் திர உணர்த்துவது நமது நம்பிக்கையினை அணையாது காக்க வேண்டும் என்பதே. நம்பிக்கை இல்லையேல் ஒன்றுமில்லை. அந்த நம்பிக்கை உயிரோடு இருக்க வேண்டும். உயிரோடு இல்லையெனில் பலனில்லை. எனவேதான் திருத்தூதர் யாக்கோபு தனது மடலில் 2:26-ல் உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே என்கிறார். செயல் என்பதற்கு சுய ஆய்வே வழிவகுக்கும்.

திலகராஜா


Add new comment

Or log in with...