ஜனக பண்டார மீதான கொலை வழக்கு இரத்து

மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு கொலை சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

கண்டி மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டிருந்த வழக்குகளையே மேல் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்து செய்துள்ளது.

1999 ஆம் ஆண்டில் வேனில் பயணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் குழு மீது அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தாக கூறி வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

தம்புள்கமுவவில் நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பேரணியில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பில் மகவல பொலிஸ் அதிகாரிகள் மாத்தளை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ததையடுத்து, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனை 2015 ஒக்டோபரில் கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தனர்.

பின்னர் அவர் கண்டி மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...