கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் அறிமுகம்

'சுபீட்சத்தின் நோக்கு'

'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைத் திட்டத்தை செயற்படுத்தும் நோக்குடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிநடத்தலின் கீழ் ஜனாதிபதி செயலணி மற்றும் அமைச்சுகள் ஒன்றிணைந்து 'கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணிக்கு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவொன்றுக்கு அமைய செயற்படுத்தப்படும் இந்த வேலைத் திட்டம் கிராம மக்களுக்கு நேரடியாக மற்றும் விரைவாக நலன்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் செயற்படுத்தப்படவுள்ளது.

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட பிரதான நான்கு குழுக்களின் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் உத்தியோகபூர்வ பணிகள் அண்மையில் அநுராதபுரத்திலுள்ள வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் இளைஞர் விவகார,மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

'சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவானது ' அமைச்சரவை அமைச்சுக்கள் மூன்றையும், இராஜாங்க அமைச்சுகள் ஒன்பதையும் கொண்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சுக்களாவன கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகிய மூன்றுமாகும்.

இராஜாங்க அமைச்சுக்களாவன மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி, ஆரம்பக் கல்வி, அறநெறி பாடசாலை கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சு, திறன் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சு, அறநெறி பாடசாலைகள், பிக்கு கல்வி, பிரிவெனா மற்றும் பௌத்த பல்கலைக்கழக இராஜாங்க அமைச்சு, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைத்துவ இராஜாங்க அமைச்சு, கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு, தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு என்பனவாகும்.

கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத் திட்டத்தில் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் உத்தியோகபூர்வ பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு அது சம்பந்தமான செயற்திட்டங்களும் கலந்துரையாடப்பட்டன. இதுவரை மக்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சங்கடப்படுத்திய பிரச்சினைகளில் ஒன்று, மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க அந்தந்த துறைக்கு பொறுப்பான ஒரு நிறுவனம் இல்லாமையாகும். இன்று அவ்வாறு இல்லை, ஏனென்றால் ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் பொறுப்பான அரசியல் அதிகாரத்தில் மக்கள் பிரதிநிதியும் ஒரு இராஜாங்க பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நன்மைகளை அரசு பொறிமுறையின் மூலம் கிராமத்திற்குக் கொண்டு செல்வதே இப்போது உள்ள சவால். அனைத்து அமைச்சகங்களையும் பார்க்கும் போது, கிராம மட்டத்தில் அரசு பொறிமுறை செயல்பட்டு வரும் ஒரு சில அமைச்சுகள் மட்டுமே உள்ளன. பிற அமைச்சகங்களுக்கு நோக்கம் மற்றும் திட்டங்கள் இருந்த போதிலும், அவற்றை கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிமுறை இல்லை. ஒவ்வொரு அமைச்சகத்திலும் கிடைக்கும் நிதி, கிராமத்தை அடைவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து அரசு பொறிமுறைகளை சிறப்பாகப் பயன்படுத்துவது பொறுப்பு ஆகும்.

நியமிக்கப்பட்ட நான்கு குழுக்கள் அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சென்று கிராம அபிவிருத்தியில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவும், பொருத்தமான உத்திகளை வகுக்கவும், அடுத்த சில ஆண்டுகளில் பல பகுதிகளில் ஏராளமான அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

-டப்ளியூ.எம்.பைசல் (கல்நேவ தினகரன்
விசேட நிருபர் ),
மதார் தம்பி ஆரிப் (அநுராதபுரம் மேற்கு
தினகரன் நிருபர்)

 


Add new comment

Or log in with...