மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு | தினகரன்

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை டீசைட் சந்தியில் நேற்று (20) இனம் தெரியாத நபரினால் மோட்டார் சைக்கிள் ஒன்றிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேலும், குறித்த மோட்டார் சைக்கிள்  ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கிய போதிலும் மேலும் ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் பழுது பார்த்துள்ளதுடன்  இரவில் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் இருந்து தொலைவில் இருந்ததாக வாகன உரிமையாளர் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
அத்துடன் இச்சம்பவ இடத்திற்கு ஹட்டன் வலய சொகொ பொலிஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதாகவும் குறித்த மோட்டார் சைக்கிளை மாத்திரம் சேதப்படுத்தும் நோக்கில் இனம் தெரியாத நபரினால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் இதுவரை யாரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.
 
(மஸ்கெலியா தினகரன் விஷேட நிருபர் -செ.தி.பெருமாள்)

Add new comment

Or log in with...