அலை 2.5 – 3.0 மீற்றர் வரை உயரலாம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை! | தினகரன்

அலை 2.5 – 3.0 மீற்றர் வரை உயரலாம்; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசத்தில் அலையின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரலாம் எனவும், இதன் காரணமாக கடற்றொழிலில் ஈடுபடுவோர் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கற்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை அண்டிய கடற்பிரதேசங்களில் கடல் அலை 2.5 முதல் 3.0 வரை உயரலாம் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு முதல் திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரை மற்றும்  காலியிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை அண்டிய ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்துக் காணப்படும். இதன் காரணமாக குறித்த கடற்பிரதேசங்களில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாக காணப்படும்.

கொழும்பிலிருந்து காலி வரை அண்டிய கடற்பிரதேசங்களில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்துக் காணப்படும். இக்கடற்பிரதேசங்களிலும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

எனவே, இது தொடர்பில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 


Add new comment

Or log in with...