பாதாள உலக செயற்பாடுகள் முற்றாக அழித்து ஒழிக்கப்படும்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ

போதைப் பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதோடு சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகக் குழுவினரையும் முழுமையாக இல்லாதொழிப்பதற்கு எமது அரசாங்கத்தில் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவ ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நீர்கொழும்பு கோல்டன் ஸ்டார் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களே பெரும் பலமாவர். அவர்களது பொருளாதார பலம் உயர்வடையும் போது குடும்பத்தின் பொருளாதார நிலைமை பலமடைவதோடு மாத்திரமன்றி அவை முழு நாட்டினதும் பொருளாதாரத்திற்கு பலமாக அமையும்.

குடும்ப பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான பிரதான பொறுப்பு பெண்களையே சாருகின்றது. அதனை தெரிந்து கொண்டு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 'திவி நெகும' உள்ளிட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்தி முழு இலங்கையின் பெண்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் எமது அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் என்றார்.

நாட்டில் போதைப் பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு தாய்மாரினதும், மனைவிமாரினதும் பிரார்த்தனையாகவுள்ளது.

அவர்களது பிரார்த்தனைக்கேற்ப அதனை முற்றாக ஒழிப்பதோடு, சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகக் குழுவினரையும் முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் எமது அரசாங்கத்தில் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.


Add new comment

Or log in with...