முகக் கவசம் அணியாவிடில் 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தல் | தினகரன்


முகக் கவசம் அணியாவிடில் 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தல்

நேற்று முதல் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

 பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களை 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி நேற்று முதல் நாடு பூராகவும் முகக் கவசம் அணியாதவர்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி மேல் மாகாணத்தில் பொது இடங்களில் 19,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்  அவர்களில் 6,700 பேர் முகக் கவசம் அணியாது இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்தே இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...