தாக்குதலுக்கான 04 காரணங்கள் விபரிப்பு அடங்கிய காணொளி ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை

கல்கிஸ்ஸையில் ஸஹ்ரான் 03 மணிநேரம் காணொளி பதிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முதல்நாள் சஹ்ரான் ஹசீம், கல்கிஸ்ஸ பகுதியில் காணொளி ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் இந்த  தாக்குதலுக்கான காரணங்களை தெரியப்படுத்தியதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார். ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி ஜமில் மொஹமட் என்பவரிடம் பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப் பிரிவு விசாரணை நடத்தியது. அது குறித்து அப்போதைய பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு அறிவிக்கப்பட்டது.

எனினும் 2019 ஏப்ரல் 08 ஆம் திகதி பூஜித் ஜயசுந்தர கையெழுத்திட்டு அனுப்பிய ஆவணத்தில் ஜமீல் மொஹமட் என்பவர் ஒரு தீவிரவாத வெறியர் என்பது தொடர்பில் எந்த தகவலும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜமீல் மொஹமட்டின் மனைவியை விசாரித்தபோது, தாக்குதல் நடந்த தினத்தன்று காலையில் குண்டுதாரி தனது மொபைல் போனில் வாட்ஸ் அப்பிற்கு ஒரு டேப்பை அனுப்பியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட தாகவும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முதல் நாளில், சஹ்ரான் ஹசீம் நீண்ட உடையை அணிந்து தரையில் விழுந்தவாறு பதிவு செய்த வீடியோக்கள் பலவற்றை இதுவரை ஊடகங்கள் ஒளிபரப்பப்படாத காணொளிகளை அவர் ஆணைக்குழுவில் முன்வைத்தார்.

அதில் தாக்குதல் நடத்த உயிர்த்த ஞாயிறு தினத்தை தெரிவு செய்தமைக்கான நான்கு காரணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வு பிரிவு உயரதிகாரி ஆணைக்குழுவில் கூறினார்.

அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களை நேசிக்கவும், தடைசெய்யப்பட்ட செயல்களை நிராகரிப்பதற்காகவும் முன்னாள் ஐ.எஸ் தலைவர் உருவாக்கிய இஸ்லாமிய அரசின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்கு பழிவாக்குவதற்காகவும் நியூசிலாந்தில் ஒரு பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வர்களை கொலை செய்தமைக்காகவும் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள முஸ்லிம் மக்களைக் கொல்வதற்கு காரணமாணவர்கள் இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டமைக்காகவும் இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தாக்கப்பட்டதாக சஹ்ரானின் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தற்கொலைக் குண்டு தாக்குதல்களை இலங்கையில் நடத்த ஏதுவான மேலும் சில காரணங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லாஹ் தெய்வத்தை ஏசுவது மற்றும் குறைத்து மதிப்பிடுதல், குளியாப்பிட்டியில் பன்றி உருவத்தில் அல்லாஹ்வை சித்தரித்தது, அல்லாஹ் மறுபிறவி எடுத்தான் என்று ஞானசார தேரர் கூறியமை, முகமது நபிக்கு எதிராக குற்றம் சுமத்தல். குர் ஆனைக் கிழித்து எரித்தமை, பள்ளிவாசல்களை இடித்தல், முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்து பொருளாதாரத்தை அழித்தமை, சர்வதேச சிலுவைப் போரில் இலங்கையின் பங்கேற்பு, அல்லாஹ்வின் சட்டத்தின்படி இஸ்லாத்தை தழுவ மறுக்கும் நபர்களை கண்ட இடத்தில் கொல்வது எனவும் ஸஹ்ரான் கூறியுள்ளதாகவும் குற்றப்புலானாய்வு பிரிவு உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

ஸஹ்ரானின் காணொளி, தாக்குதல் நடத்த முன்னர், ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 01 மணி முதல் 03 மணி வரையான நேரத்தில் கல்கிஸ்சையிலுள்ள கட்டடத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஸஹ்ரான் ஹசீமிடமிருந்த ரீ56 ரக துப்பாக்கி, 2017 ஆம் ஆண்டு முதல் பயிற்சிகளுக்காக அதனை சஹ்ரான் பாவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Add new comment

Or log in with...