திருமணம் என்ற பொய்யான வாக்குறுதியுடன் உடலுறவு கொண்டது கற்பழிப்பு ஆகாது

ஒடிசா உயர்நீதிமன்றம்

ஒருவர் திருமணம் செய்வேன் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து பெண்ணுடன் உடலுறவு கொண்டது கற்பழிப்பு ஆகாது என ஒடிசா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோராபுட் மாவட்டைச் சேர்ந்த மாணவன் மீது 19 வயதான பழங்குடி பெண் கற்பழிப்பு புகார் அளித்திருந்தார்.

அந்த பெண்ணும் அந்த மாணவனும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். இருவரும் ஒன்றாக பழகியுள்ளனர். நான்கு வருட பழக்கத்தின்போது இரண்டு முறை அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

என்னுடைய அப்பாவித்தனம் மற்றும் திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைக்காட்டி என்னுடன் உடலுறுவு வைத்துக் கொண்டார். மேலும் மாத்திரை உட்கொண்டு கருக்கலைப்புக்கு வற்புறுத்தினார் என அந்த பெண் புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசார் அந்த மாணவன் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த மாணவன் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் இருந்தான்.

இந்நிலையில் பிணை கேட்டு ஒடிசா உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளான். அப்போது நீதிமன்றம் அவனுக்கு பிணை வழங்கியது. அத்துடன் ‘‘வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு மிரட்டக்கூடாது’’ என்று நிபந்தனையும் வழங்கியுள்ளது.

அப்போது நீதிபதி பனிபிராஹி தனது 12 பக்க உத்தரவில் ‘‘எந்தவித உத்தரவாதம் இல்லாத நிலையில் கூட ஒருமித்த உறவு உண்மையிலேயே கற்பழிப்பு குற்றச்சாட்டின் 376 பிரிவின் கீழ் கொண்டு வர இயலாது. மேலும் இதுபோன்ற வழக்குகள் எப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற கேள்வியையும் எழுப்புகின்றன.

கற்பழிப்பு சட்டம் பெரும்பாலும் சமூக பின்தங்கிய மற்றும் ஏழைகளின் அவல நிலையை நிவர்த்தி செய்யத் தவறியது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் ஆசைவார்த்தை கூறும் நபர்களால் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் ’’ எனத் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...