டெங்கு மீண்டும் தலைதூக்கும் அபாயம்! | தினகரன்


டெங்கு மீண்டும் தலைதூக்கும் அபாயம்!

- 19,446 டெங்கு நோயாளர்கள் பதிவு

தற்போது பெய்யும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதாக, சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை,  19,446 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 463 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு,  இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 457 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

எவ்வாறாயினும்,  இக்காலப்பகுதியில் நாட்டில் பெய்யும் மழை கரணமாக மீண்டும் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரித்தார்.
 


Add new comment

Or log in with...