நோன்புப் பெருநாள் காலத்தில் மக்கள்ஒன்றுகூடுவது பாதுகாப்பானது அல்ல!

அலட்சியமாக இருந்தால் வேதனைப்பட வேண்டியிருக்கும் - அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கு அறிவுரை

‘முஸ்லிம்கள் இம்முறை நோன்புப் பெருநாள் புத்தாடைக் கொள்வனவைத் தவிர்த்து, கொரோனா வைரஸ்

தொற்றிலிருந்து தொடர்ந்தும் பாதுகாப்புப் பெற வேண்டும். ஊரடங்கு

அமுலிலுள்ள காலங்களிலும் ஊரடங்கு தளர்வு நேரங்களிலும் பொதுமக்கள் மிகவும் அவதானம், விழிப்புணர்வுடன் தொழிற்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர்; மேலும் குறிப்பிடுகையில்,”கொரோனா வைரஸ் தொற்றைக்; கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்கள்

கடந்த காலங்களைப் போன்று, தொடர்ந்தும் நிறைவான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசும், சுகாதாரத் துறையினரும் இதனையே பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது றமழான் நோன்பு காலமாக இருப்பதனாலும், நோன்புப் பெருநாள் எதிர்கொள்ளப்படுவதனாலும் நகரில் வியாபாரம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆகையால், வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து

கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அக்கரைப்பற்றிலுள்ள ஜவுளிக்கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தனித்தனிதாக ஏற்கனவே சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு, இவ்விடயம் தொடர்பில் மிகத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’ எனவும் டொக்டர் பறூஸா நக்பர் தெரிவித்தார்.

கொரோனா பாதுகாப்பு தொடர்பான சந்திப்பொன்று அண்மையில் அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்வில் டொக்டர் எப்.எம்.ஏ.காதர், பொதுச்

சுகாதாரப் பரிசோதகர்கள் ஏ.பி.சம்சுடீன், ஏ.எச்.எம்.பௌமி,

எம்.சீ.எம்.ரஊப், எஸ்.சசிதரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் முறையான கை கழுவும் வசதியை ஏற்படுத்துமாறும், அனைத்து நிலைமைகளின் போதும் போதுமானளவு சமூக இடைவெளியை

பேணுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் தொடர் மேற்பார்வையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

“நமது நாடு மாத்திரமன்றி சர்வதேசம் எதிர்கொண்டுள்ள தற்போதைய

அசாதாரண நிலைமையைக் கருத்திற் கொண்டு, நோன்புப் பெருநாள் புத்தாடைக் கொள்வனவை முற்றாகத் தவிர்த்து, தொடர்ந்தும் வீட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவது ஆரோக்கியமானதாகும். இது அரசுக்கு நிறைவான ஒத்துழைப்பு வழங்குவதாகவும், எங்களது நாட்டுப்பற்றை வெளிக்காட்டுவதாகவும் அமையும்.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், ஊரடங்கு தளர்த்தப்படும் காலங்களில் வியாபார நிலையங்கள் திறக்கப்படும் போது அவதானமாக இருத்தல் வேண்டும். அரசு மற்றும்

சுகாதாரத்துறை எதிர்பார்க்கும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் சுகாதார நடைமுறைகளுக்கு எவ்விதத்திலும் குந்தகம் ஏற்படாத வகையில் தங்களது வியாபார நடவடிக்கைகளை வியாபாரிகள் முன்னெடுக்க வேண்டும்.

குறித்த சில பிரதேசங்களில் நாம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பினை சிலர்வழங்காது, உதாசீனத்துடன் நடந்து கொள்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஊரடங்கு காலங்களிலும் ஊரடங்கு தளர்வு நேரங்களிலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் கவலையளிக்கின்றது. இவ்வாறானவர்கள் எம்மால் அவ்வப்போது

அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

நாங்கள் ஒவ்வொருவரும் சுயஇலாபம் கருதிய செயற்பாடுகளைக்

முழுமையாகக் கைவிட்டு, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தினதும், நாட்டினதும் பாதுகாப்புக் கருதி பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டும். அதுவே, மக்கள் வழங்கும் நிறைவான ஒத்துழைப்பும், பாதுகாப்புமாகும். அதனையே அரசும், சுகாதாரத்துறையும் நாட்டு மக்களிடமிருந்து எந்நேரமும் எதிர்பார்க்கின்றன.

நோய்த் தொற்று ஏற்பட்டவுடன் கவலையுற்று, அவதியுறுவதை விடவும், தொற்று வருமுன் காப்பதே அனைவருக்கும் சிறந்ததாகும். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பில் நாங்கள் நிறையவே அறிவுறுத்தப்பட்டுள்ளோம். நமது நாட்டில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் நாடுகளில் இடம்பெறும் செய்திகளை தினசரி பார்த்தும் கேட்டும் வருகின்றோம். இவற்றை மனதில் நிலை

நிறுத்தியவர்களாக நாங்கள் எங்களது அன்றாடப் பணிகளில் ஈடுபடுவோம். தொடர்ந்தும் வீட்டிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்” என்று இச்சந்திப்பின் போது அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

ஐ.எல்.எம்.றிஸான்
அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

 


Add new comment

Or log in with...