புகைத்தலும் போதையூம் கொரோனாவின் நண்பர்கள்!

தீய பழக்கத்திலிருந்து மீள இதுவே உரிய சந்தர்ப்பம்

இங்கிலாந்து மருத்துவர் ஒருவர் கஞ்சா புகைக்கும் போதைப் பழக்கம் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

முன்னதாக சிகரெட் புகைப் பழக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது கஞ்சா புகைக்கும் பழக்கமும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகமாக்கக் கூடும் என அவர் கூறி உள்ளார்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. கொரோனா வைரஸ் கிருமியை தடுத்து நிறுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தங்களுக்கு வராமல் ஒவ்வொருவரும் தன்னை முன்னெச்சரிக்கையாக காத்துக் கொள்வது மட்டுமே இந்த பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்க ஒரே வழியாக உள்ளது.

மருத்துவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அறிவூறுத்தி வருகிறார்கள். குறிப்பாகஇ நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்து இருக்கிறார்கள்.

நுரையீரல் பாதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவூ ஆகிய இரண்டுமே சிகரெட் புகைப்பவர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளாகும். மருத்துவர்கள் ஆய்வூ நடத்தி புகைப் பழக்கம் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டி எச்சரித்தனர்.

இந்த நிலையில்இ கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என வெளியாகி வரும் பல வதந்திகளை நம்பி பலரும் பல சிக்கல்களில் சிக்கி வருகிறார்கள். அப்படி ஒரு வதந்திதான் கஞ்சா புகைத்தால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்பது.

பல நாடுகளில் குறிப்பிட்ட அளவூ வரை கஞ்சா பயன்படுத்த அனுமதி உள்ளது. அங்கெல்லாம் பலர் இந்த வதந்தியை நம்பி கஞ்சா புகைக்கத் தொடங்கினர். இந்த நிலையில்இ இங்கிலாந்து மருத்துவர் ஸ்டாண்டன் கிளாண்ட்ஸ்இ கஞ்சா புகைப்பது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எனக் கூறி இருக்கிறார்.

"புகை பிடிப்பதால் வைரஸ் காய்ச்சல் வராது. ஆனால்இ புகை பிடிப்பவர்கள் மற்றும் வேறு ஒருவரிடம் வாங்கி புகைப்பவர்கள் நோயில் சிக்க அதிக வாய்ப்புள்ளது" எனக் கூறி உள்ளார் அவர்.

"கொரோனா வைரஸ் குறித்து நம்மிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால்இ புகைப்பழக்கம் நுரையீரலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பதற்கு நிறைய ஆதாரம் உள்ளது. கஞ்சா புகைப்பதையூம்இ புகையிலை புகைப்பதையூம் ஒப்பிட்டுப் பார்த்தால்இ பெரிய வித்தியாசமில்லை" எனவூம் அவர் கூறினார்.

கிறிஸ் விட்டி என்ற பேராசிரியர் கூறுகையில்இ "நீங்கள் புகைப் பழக்கத்தை விட நினைக்கிறீர்கள் என்றால்இ அதற்கு இதுதான் சரியான தருணம்" எனக் கூறி உள்ளார்.

கஞ்சாஇ புகையிலை பழக்கம் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் கொரோனா வைரஸைக் காரணமாக வைத்தாவது அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்பதே இவர்கள் சொல்லும் எளிதான தீர்வூ. இந்த நேரத்தில் புகைப் பழக்கம் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அரவிந்தன்

 

 


Add new comment

Or log in with...