அரிமெக் டிஜிட்டல் மற்றும் ஹாபோஸ் பீஸா அறிமுகப்படுத்தும் ‘ஹாபோஸ் பீஸா ரஷ்’

அரிமெக் டிஜிட்டல் நிறுவனத்தின் இலங்கையின் முதன்மை ஒன்லைன் கேமிங் தளமான IMI கேம்ஸ், இலங்கையின்  முதல் உள்நாட்டு பீஸா வர்த்தக நாமமான ஹாபோஸ் பீஸா அன்ட் பஸ்தாவுடன் கூட்டிணைந்து தனது வர்த்தக நாமம் சார்ந்த ‘ஹாபோஸ் பீஸா ரஷ்’ எனும் ஒன்லைன் விளையாட்டை அறிமுகம் செய்கிறது. இப்புதிய அனுபவம் ஊடாக இலங்கையில் எப்போதும் தொடர்பிலிருக்கும் ஏராளமான ஸ்மார்ட்போன் பாவனையாளர்களும் மற்றும் உணவுப் பிரியர்களும் ஹாபோஸ் பீஸா வழங்கும் வாராந்த பரிசுகளை விளையாடி வெல்ல முடியும். 

 ‘பீஸா ரஷ்’ ஒவ்வொரு ஆட்டக்காரரையும் அனுபமிக்க ஹாபோஸ் சமையல் கலைஞராக பார்க்கிறது. நாவூறும், வேகவைத்த ஹாபோஸ் பீஸா வகைகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் அதேவேளை பச்சை நிறக்கோடு கறுவா மரக்கட்டுகளை சேகரித்து சிவப்பு நிறக் கோடு மரக்கட்டைகளை தவிர்க்க வேண்டும். நாடு முழுவதும் இவ்விளையாட்டில் ஈடுபவர்கள் ஹாபோஸ் பீஸா விருந்துக்கான பரிசு வவுச்சர்களை உள்ளடக்கி வாராந்தம் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெறுகின்றனர்.  

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் 50விளையாட்டுக்களில் 50,000க்கு மேற்பட்ட டவுண்லோட்களை கொண்ட பெருமைக்குரிய IMI கேம்ஸ், தற்போது பெரு நிறுவனங்களுக்கு வர்த்தக நாமங்களை மையப்படுத்திய விளையாட்டுக்களை அந்நிறுவனங்களின் தளத்திலே செயற்படுத்தி கொடுக்கின்றது. இதன் விளைவாக ஹாபோஸ் பீஸா நிறுவனத்துடன் இணைந்து ‘ஹாபோஸ் பீஸா ரஷ்ஷை’ அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாபோஸ் பீஸாவை பிரதிபலிக்கும் போரனை அடுப்பு மற்றும் சமையல் கலைஞர் உடை என்பவற்றை உந்துதலாகக் கொண்டு ஹாபோஸ் வர்த்தக நாமத்தின் நிறுவுனர் மற்றும் தலைவர் ஹார்போ குணரத்னவும் சேர்ந்த பிரத்தியேகமான விளையாட்டு சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஹாபோஸ் தனது இலக்கான வாடிக்கையாளர்களை சென்றடையும் முயற்சியில் IMI கேம்களை பிரத்தியேக ஊடக பங்காளியாகப் பயன்படுத்துகிறது. ஏற்கனவே நாட்டின் இளம் வாடிக்கையாளர்களைக் கொண்டு, IMI கேம்ஸ், பெருநிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் ஈடுபாட்டு நடவடிக்கைகளை இயக்கக்கூடிய சிறந்த தளமாக இயங்குகிறது. 


Add new comment

Or log in with...