ஒலுவில் அல் ஹிறா பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும் | தினகரன்


ஒலுவில் அல் ஹிறா பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பும்

படங்கள்: பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்

ஒலுவில் அல் ஹிறா பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் ஒலுவில் காடின் வெளியரங்கில் நடைபெற்றது.

அல் ஹிறா பாலர் பாடசாலையின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ். றிஸான் (நழிமி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென் கிழக்குப் பல்கலைக்கழக உடற் கல்வி பிரதி பணிப்பாளர் எஸ்.எம்.பி. ஆசாத் பிரதம அதிதியாகவும், ஒலுவில் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எஸ். அமின், எம்.எஸ். நிஹால், ஒலுவில் அல் ஹம்றா மகாவித்தியாலய அதிபர் அஷ்ஷெய்க் யூ.கே.அப்துல் றஹிம் (நழிமி), ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களிடையே பலூன் ஊதி உடைத்தல், சம நிலை ஓட்டம், போத்தலில் நீர் நிரப்புதல், கைறு இழுத்தல், கரண்டியில் தேசிக்காய் வைத்து நடத்தல் போன்ற பல்வேறு போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றன.

போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும பரிசுப் பொருட்கள் என்பன நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Add new comment

Or log in with...