Monday, April 29, 2024
Home » சின்ன வெங்காய செய்கைக்கு இலவச விவசாயக் காப்புறுதி
நடைமுறையிலுள்ள 6 பயிர்களுடன்

சின்ன வெங்காய செய்கைக்கு இலவச விவசாயக் காப்புறுதி

by mahesh
February 14, 2024 9:40 am 0 comment

சின்ன வெங்காயப் பயிர்ச்செய்கைக்காக இலவச காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது விவசாய மற்றும் கமநல காப்புறு சபை மூலம் 06 அத்தியாவசிய பயிர்ச்செய்கைகளுக்காக இலவசமாக விவசாயக் காப்புறுதி வழங்கப்பட்டு வருகிறது.

நெல், மிளகாய், பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, சோளம் மற்றும் சோயா ஆகிய பயிர்ச்செய்கைகளுக்கே இலவச காப்புறுதி வழங்கப்படுகிறது. சின்ன வெங்காயத்துக்கும் இக்காப்புறுதியை வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த காப்புறுதியானது காட்டு யானைகளால் ஏற்படும் பயிர்ச்செய்கை பாதிப்பு, வரட்சி மற்றும் அதிக மழை காரணமாக ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

சின்ன வெங்காயச் செய்கையின் போது மேற்குறிப்பிட்டுள்ள பாதிப்புகளுக்கிணங்க ஏற்படும் சேதங்களுக்கு, காப்புறுதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த வகையில் ஏற்கனவே காப்புறுதி வழங்கப்பட்டுவரும் 06 அத்தியாவசிய பயிர்ச்செய்கைகளோடு சின்ன வெங்காய பயிர்ச்செய்கையும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT