ஜப்பானில் தீ; 23 பேர் உயிரிழப்பு | தினகரன்

ஜப்பானில் தீ; 23 பேர் உயிரிழப்பு

ஜப்பானிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு இனந்தெரியாத நபரொருவர் தீ வைத்ததில் 23 பேர் உயிரிழந்துள்ளதோடு, 12 இற்கும் மேற்பட்டவர்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜப்பானின் கியோட்டோவில் அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட அனிமேஷன் ஸ்டூடியோவிலேயே இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த ஸ்டூடியோவை உடைத்த 41 வயதான ஒருவர், பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக, அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த கட்டிடத்தில் தீ வைக்கப்பட்ட வேளையில் 70 பேருக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதாகவும், வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் எரிகாயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 


Add new comment

Or log in with...