அடிப்படைவாதிகளை தோற்கடிக்க வேண்டும்! | தினகரன்


அடிப்படைவாதிகளை தோற்கடிக்க வேண்டும்!

'நாட்டினுள் அனைவருக்கும் ஒரே சட்டத்தை அமுல்படுத்தினால் மட்டுமே சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும்'

"வகாப்வாதிகளைப் போன்று அடிப்படை வாதிகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்" என்கிறார் பொது விநியோகம் மற்றும் பொருளாதார சீர்திருத்த அமைச்சர் ஹர்ஷ த சில்வா

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணியானது அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை 27 மேலதிக வாக்குகளால் அரசாங்கம் தோல்வியடையச் செய்துள்ளது. அது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசியல் ரீதியாக வெற்றி பெற்றோம். ஆனால் நான் எனது உரையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை தோல்வியடையச் செய்யக் கூடாதெனக் கூறியிருந்தேன். நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்படடிருந்த விடயங்களை நாம் எதிர்காலத்தில் நிச்சயம் தீர்க்க வேண்டும்.

கேள்வி: நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை தோல்வியடைச் செய்ய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது?

பதில்: இங்கு நாம் வகாப்வாதிகளைப் போன்று ஏனைய அடிப்படைவாத பிரிவினைகளையும் தோல்வியடையச் செய்ய வேண்டும். அதன் பின்னர் நடுநிலையான கொள்கையுடையவர்களுக்கு நாம் நல்ல பலமாக அமைய வேண்டும். அது பௌத்தமாகட்டும், இஸ்லாமாகட்டும், கத்தோலிக்கமாகட்டும், இந்துவாகட்டும்... அனைத்து அடிப்படைவாதிகளையும் தோற்கடித்து நடுநிலையாளர்களை உருவாக்க வேண்டும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதன் மூலம் நிச்சயமாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

கேள்வி: நடுநிலையாளர்களை பலம் பொருந்தியவர்களாக்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பது எவ்வாறு?

பதில்: எம்மால் இந்த ஒழுங்குமுறையற்ற மதரஸா பாடசாலைகளைக் கல்வியமைச்சின் கீழ் கொண்டுவர முடியும். அவற்றுக்கென ஒழுங்குமுறைகளை பெற்றுக் கொள்ள முடியும். அனைத்து மதரஸா பாடசாலைகளையும் அவ்வாறு ஒழுங்கமைத்து, ஒரு நாட்டினுள் ஒரே சட்டத்தை அனைவருக்கும் அமுல்படுத்தும் வகையில் அமைத்தால் மட்டுமே எம்மால் இந்த சவாலை வெற்றி கொள்ள முடியும்.

கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தது. அரசாங்கத்தை பாதுகாக்க அல்லது அரசாங்கத்துக்கு ஒட்சிசன் வழங்கவே அவ்வாறு செய்ததாக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுவதன் உண்மை நிலையென்ன?

பதில்: அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லை. மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க அவர்களுடன் நாம் இணைந்து செயல்பட்டது உண்மையே. ஆனால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் முன்னணிக்கு எதிராக. அதனால் இங்கு கூறப்படும் கதையில் எதுவித உண்மையுமில்லை.

கேள்வி: கொழும்பிலிருந்து திருகோணமலை வரை காணிகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப் போவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் சரியான பதிலை அளிக்கவில்லையா?

பதில்: நிதியமைச்சு அது தொடர்பாக மக்களுக்கு தெரிவித்தது. அவற்றையும் மீறி பொய்யான கருத்தை சிலர் சமூகத்தில் பரப்ப முயற்சி செய்கின்றார்கள். பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை அந்தப் பொய்யான கருத்து மறைத்து விட்டது.

கேள்வி: அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறினாலும் சில முகநூல் உரிமையாளர்களின் பக்கங்கள் நீக்கப்படுவதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதல்லவா?

பதில்: இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தும் கருத்துகள் முகநூலில் பரவுவதை எவ்வாறு தடுப்பது என நாம் குறிப்பிட்ட நிறுவகத்துடன் கலந்துரையாடினோம். ஆனால் அந்த நிறுவனம் அதனை கட்டுப்படுத்தவில்லை. அதனால் இனங்களிடையே ஏற்படும் மோதலைத் தடுக்க ஒரு வாரம் வரை நாம் அதனை தடை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அரசாங்கம் சொல்வதை அந்நிறுவனங்கள் கேட்பதில்லை. அரசாங்கம் கூறியவுடன் முகநூலை தடை செய்திருந்தால் அரசாங்கத்துக்கு அதனை தடை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

கேள்வி: அரசாங்கம் அபிவிருத்தி நடவடிக்கைகளை விட அதிகமாக பிரசார நடவடிக்கைகளுக்கு பணம் செலவிடுவதாக குற்றச்சாட்டு உள்ளதல்லவா? சமுர்த்தி பெற்றுக் கொடுக்கும் விழாக்கள், வீடுகளை பெற்றுக் கொடுக்கும் விழாக்கள் எனபனவே இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளன அல்லவா?

பதில்: இவ்வளவு நாளும் அரசாங்கம் எவ்வளவு சேவை செய்தாலும் அதுபற்றிய பிரசாரங்கள் இல்லையென மக்கள் கூறினர். பிரசாரம் செய்யும் போது இவ்வாறு குற்றம் சாட்டுகின்றார்கள். நாம் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். யாருக்கும் எதையும் கூற முடியும். ஆனால் இந்நாட்டு மக்கள் அறிவார்கள் நாம் செய்த சேவை அளவுக்கு பிரசாரம் செய்யவில்லை என்று.

கேள்வி: 19வது அரசியலமைப்பு சட்டத்தின்படி எதிர்கால ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்படுதல் நாட்டின் எதிர்கால பணத்துக்கு தடையாகுமா?

பதில்: ஜனாதிபதி கூறினார் அவர் சிரிசங்கபோ பொன்றவர் என்று. தனக்கான அதிகாரத்தை கைவிட்டவர் என்று. ஜனாதிபதியை அபேட்சகராக்கிய போது ஒரு தடவை மாத்திரம் பதவி வகிப்பேனென 19வது அரசியலமைப்பு திருத்தத்தால் அதிகாரத்தை குறைக்க அவரே இணங்கியிருந்தார். அதன்படி சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

கேள்வி: சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை நீங்களே உருவாக்கினீர்கள். அதன் மூலம் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறியதா?

பதில்: இது புதிய வேலைத் திட்டம். மக்களுக்கு நன்மை கிடைக்கும் திட்டம், நாம் இதனை சிறிய அளவிலேயே தொ்ங்கினோம். இந்த நான்கு ஆண்டுகளுக்குள் முழு இலங்கையுமே இணைக்கப்பட்டுள்ளது. எட்டரை நிமிடத்தில் மேல்மாகாணத்தில் அம்பியூலன்ஸ் ஒன்றை நோயாளியொருவருக்காக கொண்டு வர முடியும். அது எவ்வளவு பெறுமதி வாய்ந்தது! எந்தவொரு நோயாளியும் பயப்படத் தெவையில்லை. 80 குழந்தைகள் இந்த அம்பியுலன்ஸ் வண்டியில் பிறந்துள்ளார்கள். நாம் மக்களின் கல்விக்காகவும் சுகாதாரத்துக்காகவும் பாரிய பணிகளை ஆற்றியுள்ளோம். எம்மைப் போன்று இந்த நாட்டில் சேவை ​ெசய்தவர்கள் யாரும் இல்லை.

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற ஐக்கிய தேசியக் கட்சியால் முடியுமா?

பதில்: ஆம். ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற முடியும். அதற்குக் காரணம் ஐக்கிய தேசியக்கட்சி இனவாத கட்சியல்ல என்பதனாலாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிழலில் இருக்க முடியும். நாம் வெற்றி பெறக் கூடிய அபேட்சகரை நிறுத்துவோம். அவருக்கு அனைத்து இன, மத மக்களின் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும்.


Add new comment

Or log in with...