உணவட்டுன சம்பவம்; ஒருவரின் சடலம் மீட்பு | தினகரன்


உணவட்டுன சம்பவம்; ஒருவரின் சடலம் மீட்பு

கடல் கற்பாறையில் ஏறி நின்று செல்பி எடுத்தபோது, கடலில் வீழ்ந்து காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (16) பிற்பகல் 5.00 மணியளவில் காலி, உணவட்டுன, ரூமஸ்ஸல பிரதேசத்திலுள்ள கடற்கரையிலுள்ள கற்பாறையின் மீது நின்று செல்பி (Selfie) புகைப்படம் எடுக்க முயற்சி செய்த நால்வர் அலையில் அடிக்கப்பட்டு கடலில் வீழ்ந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களில் இருவர் கற்பாறைகளை பிடித்து கரைசேர்ந்துள்ளதோடு,மற்றைய இருவரும் அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர். .இவ்வாறு காணாமல் போன இருவரில் ஒருவரது சடலமே இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

மற்றைய சடலத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...