Friday, April 26, 2024
Home » மட்டக்களப்பில் பொங்கல் பண்டிகை பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம்

மட்டக்களப்பில் பொங்கல் பண்டிகை பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம்

by Prashahini
January 14, 2024 1:44 pm 0 comment

வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியில் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களைக் கடைப்பிடிக்கும் நோக்கோடு தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு மட்டக்களப்பு பொதுச் சந்தை வளாகத்தில் இன்று(14) பொங்கலுக்கான பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தினர்.

வெள்ளம் வடிந்து போக்குவரத்து நடைபெறும் நிலையில் அரச மற்றும் தனியார் பஸ்களில் படுவான்கரையிலிருந்து மக்கள் எழுவான் கரைக்கு வந்து தமது தேவைகளை நிறைவேற்றியதைக் காண முடிந்தது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க வும் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையிலும் புதிய பானை,புது அகப்பை, கரும்பு, மஞ்சள்,இஞ்சி,பழங்கள் மற்றும் புதிய ஆடைகள் என்பனவற்றை கொள்வனவு செய்து பொங்கல் பண்டிகையை கொண்டாடும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு விஷேட நிருபர் – சிவம் பாக்கியநாதன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT