Saturday, April 27, 2024
Home » இந்தோனேசிய மாணவர்களால் துரத்தப்பட்ட ரொஹிங்கியர்கள்

இந்தோனேசிய மாணவர்களால் துரத்தப்பட்ட ரொஹிங்கியர்கள்

by Gayan Abeykoon
December 29, 2023 5:02 pm 0 comment

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான அச்சேவில் தற்காலிக முகாம்களில் அடைக்கலம் பெற்றிருக்கும் ரொஹிங்கிய அகதிகளை நாடுகடத்தக் கோரி அவர்கள் தங்கியுள்ள தற்காலிக முகாம்களை ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

கடந்த மாதத்திலிருந்து அச்சேவுக்கு வந்துகொண்டிருந்த அகதிகளுக்கும் மாநிலக் குடியிருப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் மோதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் வருகையை அடுத்து பாகுபாட்டுக்கு முகம்கொடுத்து வரும் மியன்மார் சிறுபான்மையினரான ரொஹிங்கியாக்கள் அந்த தற்காலி முகாமில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் பொலிஸாரின் உதவியோடு இன்னொரு அரசாங்க அலுவலகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் அதிர்ச்சியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தற்காலிக முகாமுக்குள் ஊடுருவியுள்ள மாணவர்கள் பெரும் கூச்சலுடன் ரொஹிங்கியர்களின் உடைமைகளை கால்களால் உதைத்துத் தள்ளியுள்ளனர்.

இணையத்தில் பரப்பப்பட்ட வெறுப்புப் பிரசாரத்தை அடுத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் ரொஹிங்கிய அகதிகளின் மிகப்பெரிய படையெடுப்பாக கடந்த நவம்பர் நடுப்பகுதி தொடக்கம் 1,500க்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் அச்சேவை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT