Friday, April 26, 2024
Home » ஒரு முக்கிய கல்வி ஆதரவுக்கான முயற்சியில் உள்ளூர் சமூகங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் Lanka Spice

ஒரு முக்கிய கல்வி ஆதரவுக்கான முயற்சியில் உள்ளூர் சமூகங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் Lanka Spice

by Rizwan Segu Mohideen
December 15, 2023 3:19 pm 0 comment

இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நிறுவனமான Lanka Spice (Pvt) Ltd, ‘Senehase Dath’ (அன்பின் கரங்கள்) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் சமூகப் பொறுப்புணர்வை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்துள்ளது. கல்வியை ஆதரிப்பதில் விசேட கவனம் செலுத்தி, சமூகத்திற்கு அர்த்தமுள்ள வழிகளில் மீளக் கொடுப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.

‘Senehase Dath’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது, அண்மையில் அத்துருகிரிய, மே.மா /ஜயா / மகாமத்திய வித்தியாலயத்தில் இடம்பெற்றது. Mc Currie நிர்வாகம், பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து, தரம் 6 முதல் 9 வரையிலான தகுதியான மாணவர்கள் குழுவை அடையாளம் கண்டு, இந்த மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் பயணத்தை எளிதாக்கும் வகையில், அத்தியாவசிய கற்கைக்கான பொருட்கள் அடங்கிய, தொகுக்கப்பட்ட பரிசுப் பொதிகளை வழங்கியது.

அத்துருகிரிய, மே.மா./ ஜயா/ மகாமத்திய வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘Senehase Dath’ ஆரம்ப நிகழ்வில், Lanka Spice (Pvt) Ltd நிறுவனத்தின் மனித வள முகாமையாளர் கௌசல்யா குணவர்தன…

Lanka Spice நிறுவனத்தின் இந்த தாராளத் தன்மை கொண்ட செயலுக்கு நன்றி தெரிவித்த, அத்துருகிரிய மகாமத்திய வித்தியாலயத்தின் அதிபர் எச்.ஏ. காமினி ஜயரத்ன, “Lanka Spice நிறுவனத்தின் இந்த ஆற்றல் மிக்க செயலை நான் மிகவும் நன்றியுணர்வோடு பாராட்டுகிறேன். கடுமையான நிதி நிலைமைகளுடன் போராடும் குடும்பங்களைச் சேர்ந்த எமது பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்களின் கல்விக்கு இது உறுதுணையாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எம்மைப் போன்ற பல பாடசாலைகள் மற்றும் சிறுவர்களுக்கு ஆதரவளித்து, இந்த சிறந்த பணியைத் தொடர Lanka Spice நிறுவனத்திற்கு அனைத்துத் வளமும், தைரியமும்  கிடைக்க பிரார்த்திக்கிறோம்.” என்றார்.

Lanka Spice (Pvt) Ltd பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஞ்சு ஆரியரத்ன, ‘Senehase Dath’ நிகழ்ச்சி தொடர்பில் பேசுகையில், “Lanka Spice ஆகிய நாம், வாழ்க்கையை மாற்றும் கல்வியின் சக்தியை நம்புகிறோம். ‘Senehase Dath’ திட்டம் இதற்கு ஒரு சான்றாகும். ஒவ்வொரு சிறுவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வது தொடர்பான முக்கியத்துவத்துடன், எம்மைச் சூழவுள்ள சமூகங்களை ஆதரிப்பதிலான எமது அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. அடுத்த தலைமுறையின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

மாணவர்களின் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உண்டாக்குவதற்கும், இது அதிகமான பாடசாலைகள் மற்றும் சமூகங்களைச் சென்றடைவதற்கும் ‘Senehase Dath’ திட்டத்தை விரிவுபடுத்த Lanka Spice எதிர்பார்க்கிறது.

1984 இல் பத்திகிரிகோரளே குடும்பத்தால் நிறுவப்பட்ட Lanka Spice (Pvt) Ltd நிறுவனமானது, ‘Mc Currie’ வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தியது. இது இலங்கையில் உண்மையான, உயர்தர மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகளாக மாறியுள்ளது. சிறந்த சமையல் அனுபவங்களை வழங்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் மத்தியில் இந்த வர்த்தகநாநமம் பரவலான பிரபலத்தைப் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT