Friday, April 26, 2024
Home » 20 ஆண்டு சிறைக்குப் பின் நிரபராதியான ஆஸி. பெண்

20 ஆண்டு சிறைக்குப் பின் நிரபராதியான ஆஸி. பெண்

by sachintha
December 15, 2023 1:06 am 0 comment

அவுஸ்திரேலியாவில் கேத்லீன் போல்பிக் என்ற பெண் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த பின் தாம் குற்றமற்றவர் என்று நிரூபித்துள்ளார்.

25 ஆண்டுகளாகக் குழந்தைக் கொலையாளி என்ற பழியைச் சுமந்து வந்த அவர் அவுஸ்திரேலியாவில் மிக மோசமாக வெறுக்கப்பட்ட பெண் என்று கூறப்படுகிறது.

2003ஆம் ஆண்டு தனது மூன்று பிள்ளைகளையும் மற்றொரு பிள்ளையையும் அவர் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. உலகம் முழுதும் அந்தச் செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

20 ஆண்டுகள் சிறையில் கழித்த அவர் மன்னிக்கப்பட்டு சென்ற ஜூன் மாதம் விடுதலை செய்யப்பட்டார். அவரது குற்றத்தை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டது. அதில் அவர் குற்றமற்றவர் என்பது புலனானது.

அவுஸ்திரேலியாவின் வரலாறு காணாத அளவு அதிக தொகை அவருக்கு இழப்பீடாகக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“நான் பட்ட துன்பம் யாருக்கும் நேரக் கூடாது. குற்றமற்றவர் என்று நிரூபிக்கும் நாள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன்,” என்கிறார் போல்பிக்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT