Friday, April 26, 2024
Home » சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி PLC இன் ஆற்றல் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி PLC இன் ஆற்றல் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

- படைப்பாற்றலைக் கொண்டாடி பிரகாசமான எதிர்காலத்தை வளர்த்தல்

by Rizwan Segu Mohideen
November 30, 2023 11:07 am 0 comment

இலங்கையின் முதன்மை வங்கியல்லாத நிதி நிறுவனமான (NBFI), People’s Leasing & Finance PLC (PLC), சமூகத்தின் மீது அது கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் வகையில், அண்மையில் சர்வதேச சிறுவர் தினத்தை வெகு விமரிசையாகவும் மக்களை ஈர்க்கும் வகையிலும் கொண்டாடியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக PLC விளையாட்டு மற்றும் நலன்புரிச் சங்கம் நாடு முழுவதும் உள்ள PLC ஊழியர்களது குழந்தைகளின் ஆற்றலை வெளிப்படுத்தும் போட்டியை நடத்தியது. இந்நிகழ்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினரின் ஆக்கப்பூர்வமான திறமைகளை வளர்ப்பதில் இந்த நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்ச்சி சித்திரம், பாடல் மற்றும் நடனம் உள்ளிட்ட பல பிரிவுகளைக் கொண்டிருந்ததோடு, 05, 5-8, 8-11, 11-14 மற்றும் 14-17 ஆகிய ஐந்து வயது பிரிவுகளில் இடம்பெற்றதுஇந்த இளம் மற்றும் வளரும் திறமையாளர்களின் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் பிரதிபலிக்கும் வகையில் சித்திரம் பிரிவில் 63, பாடலுக்கு 42, நடனம் என மொத்தம் 100க்கும் படைப்பாற்றல்கள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந்த போட்டி நிகழ்வின் பொது நியாயமான மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் முகமாக, ஒன்பது அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஒரு சுயாதீன நடுவர் குழுவை PLC நியமித்தது. இக்குழாமில் நியமிக்கப்பட்ட நடுவர்கள் குறிப்பிட்ட பிரிவில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வியாளர்கள் பங்கேற்பாளர்களை மதிப்பிடுவதிலும், வெளிப்படைத்தன்மை மற்றும் போட்டிசார் விழுமியங்கள் ஆகியவை பின்பற்றப்படுவதை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்தனர். இந்த நடுவர் குழுவின் தீர்விற்கமைய, பிரிவுகளில் இருந்து 45 சிறுவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இப்போட்டி நிகழ்வின் வெற்றியாளர்களை கௌரவிக்கும் முகமாக 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அன்று கொழும்பு BMICH – Orchid கேட்போர் கூடத்தில் ஒரு சிறப்பு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், PLC இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான திரு ஷமீந்திர மார்செலின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் 45 இளம் வெற்றியாளர்கள், அவர்களத பெற்றோர்கள், PLC இன் நிர்வாகக் குழுவின் பிரதிநிதிகள், நடுவர் குழாம், PLC விளையாட்டு மற்றும் நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முன்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளர், திரு ஷமீந்திர மார்செலின் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டுக்கான எமது திட்டத்தின் கருப்பொருள் – “எங்கள் குழந்தைகளுக்கான சிறந்த எதிர்காலத்தை மறுவடிவமைத்தல்என்பதாகும்எதிர்கால சந்ததியினருக்காக நமது பூமியை பாதுகாப்பதில் இளைய தலைமுறையினர் வகிக்கும் முக்கிய பங்கை இது வலியுறுத்துகிறது. எமது குழந்தைகள் இந்த பூமியின் எதிர்கால தலைவர்கள் என்பதையும் இப்பூமியின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் பொறுப்பு எமக்கு உள்ளது என்பதை நினைவூட்டும் செய்தியாகவும் இது உள்ளது. சர்வதேச சிறுவர் தினத்தைக் குறிக்கும் வகையில் குழந்தைகளை ஈடுபடுத்தி, அவர்களது திறமைகளுக்கு எமது ஆதரவை வழங்கி, ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அவர்களுக்கு வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.”

இந்த நிகழ்வை ஆரம்பிக்கும் முகமாகவும் நிலையான எதிர்காலத்தை வளர்ப்பதில் PLC இன் அர்ப்பணிப்பைக் குறிக்கும் முகமாகவும், ஒவ்வொரு குழந்தைக்கும் சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறங்களிலான ‘Eco-Plantable’ பேனாக்கள் வழங்கப்பட்டன. மக்கும் பொருட்கள் மற்றும் விதைகளைக் கொண்ட இந்த பேனாக்கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் நிலத்தில் நடப்படலாம். ஆகையால் இந்த பரிசு வழங்கல் பூமியை பாதுகாப்பதில் PLC இன் அர்ப்பணிப்பை காட்டுகின்றது. இந்த பேனாக்கள் ஒவ்வொன்றும் சுற்றுச்சூழலுக்கு கழிவாகச் சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவை வெகுவாகக் குறைக்கின்றது

வெற்றிபெற்ற சிறுவர்களின் அதிசிறந்த படைப்பாற்றல் மற்றும் கலைத் திறன்களை அங்கீகரித்து, அவர்களுக்கு சான்றிதழ்கள், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள், மற்றும் பெறுமதிமிக்க பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு பங்கேற்பாளரும் இப்போட்டியில் வெளிப்படுத்திய ஆர்வம் மற்றும் உற்சாகத்தை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, இலங்கையின் புகழ்பெற்ற பாடகர் ஹர்ஷன திஸான்யகாவின் வசீகரிக்கும் இசை நிகழ்ச்சியும் இவ்விழாவை மேலும் மெருகூட்டியது. கூடுதலாக, 14-17 வயதுக்குட்பட்ட பாடல் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்கள் இவ்விசை நிகழ்ச்சியின்போது டூயட் பாடலை பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து PLC இன் தலைமை அலுவலகத்தில் CEO/GM உடனான சந்திப்புடன் கூடிய காலை அமர்வைத் தொடர்ந்து, 45 வெற்றியாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் ஆகியோர் open-air double-decker பேருந்தில் கொழும்பு நகர சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர்கள் கொழும்பு தாமரை கோபுரம் மற்றும் துறைமுக நகர் போன்ற முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்

PLC யானது அதன் வருடாந்திர சிறுவர் படைப்பாற்றல் வெளிப்படுத்தும் போட்டியை நடத்துவதன்மூலம், சமூகத்தின் மீது இந்நிறுவனம் கொண்டுள்ள வலுவான பொறுப்புணர்வு மற்றும் நிலைத்தன்மை, இளைய தலைமுறையினரின் படைப்பாற்றல் உணர்வை வளர்ப்பது மற்றும் நமது குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவது ஆகியவற்றில் கொண்டுள்ள அக்கறை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. இது போன்ற முன்முயற்சிகள் மூலம், PLC ஆனது இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.

PLC பற்றி
இலங்கையில் உரிமம் பெற்ற வங்கியல்லாத நிதி நிறுவனமான People’s Leasing & Finance PLC, அதன் புத்தாக்கம் மற்றும் தகுந்த நிதி தீர்வுகளை வழங்குவதில் உறுதியான உறுதிப்பாட்டை கொண்டுள்ளது. உறுதியான அத்திவாரம், பலதரப்பட்ட தயாரிப்புக்களைக்கொண்ட பட்டியல் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன், PLC நிறுவனமானது நிதிச் சேவைத் துறையில் முன்னணியில் உள்ளது. மக்கள் வங்கியின் துணை நிறுவனமாக, PLC ஆனது, இலங்கை மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவித்து, நிதிச் சேவைகளை நம்பகமான, நன்மதிப்புமிக்க முறையில் வழங்கும் நிறுவனம் என்ற நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT