கமரின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் | தினகரன்

கமரின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்

அவுஸ்திரேலிய பொலிஸாரால் கடந்த 18 நாட்களுக்கு மேலாக பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையரான மொஹமட் கமர் மீதான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கொழும்பு சுதந்திரசதுக்க முன்றலில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் கமர் மீதான விசாரணையை முறையாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அவரது உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் கைச்சாத்திட்ட அறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.

அவுஸ்திரேலியாவின் கிரிமினல் குற்றச்சட்டம் 1995இன் கீழ் பயங்காவரத செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான ஆவணங்களை சேகரித்தல் அல்லது தயாரித்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கமரின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் எதுவும் எமக்கு கிடைக்காததையிட்டு நாம் கலவரமடைந்துள்ளோம்.

அவர் இலங்கையிலுள்ள குடும்பத்தாருடன் கிரமமாக தொடர்புகொள்ளும் உரிமையை அவருக்கு வழங்குமாறும், அவரது சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்குமாறும் நாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...