மாங்குளம் வெடிப்பு சம்பவம்; காயமடைந்த மற்றையவரும் உயிரிழப்பு | தினகரன்


மாங்குளம் வெடிப்பு சம்பவம்; காயமடைந்த மற்றையவரும் உயிரிழப்பு

மாங்குளம் வெடிப்பு சம்பவம்  காயமடைந்த மற்றையவரும்  உயிரிழப்பு-Land Mine Clearing-2nd Youth Death

 

மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிந்த போது, வெடிபொருள்  வெடித்ததில் படுகாயமடைந்த இரண்டாவது நபரும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர இறுதியில் உள்ள தேக்கங்காட்டுப்பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் அதில் பணி செய்துகொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்த. சம்பவம்  திங்கட்கிழமை (03) இடம்பெற்றது.

கடந்த திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிளிநொச்சி பரவிபாஞ்சானை சேர்ந்த 28 அகவையுடைய பத்மநாதன் திலீபன் என்ற கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளதுடன் ஓமந்தையினை சேர்ந்த 25 அகவையுடைய நிதர்சன் என்பவர் காயமடைந்திருந்திருந்தார்

இச்சம்பவத்தில், ஏற்கெனவே,கிளிநொச்சியை சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த வவுனியா ஓமந்தையைச் சேர்ந்த இராஜேந்திரன் நிதர்சன் (28) என்வவர், நேற்றுமுன்தினம் (05) மாலை, உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(மாங்குளம் குருப் நிருபர் - ஷண்முகம் தவசீலன்)

 


Add new comment

Or log in with...