கடினமான சூழலில் இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டனர் | தினகரன்


கடினமான சூழலில் இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டனர்

–விராட் கோலி

கடினமான சூழலில் எங்களை விட இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டதால் அவர்களுக்கு வெற்றி வசமானது என இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்தார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-–1 என இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.

இதற்கிடையே, நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து 3-–1 என வென்று, தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில், கடினமான சூழலில் எங்களை விட இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டதால் அவர்களுக்கு வெற்றி வசமானது என இந்திய தலவைர் விராட் கோலி தெரிவித்தார்.

இதுதொடர்பாக, இந்திய அணியின் தலைவர் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறுகையில், முந்தைய நாள் இரவில் இந்த டெஸ்டில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைத்தேன். ஆனால் நாங்கள் விரும்பிய மாதிரி தொடக்கம் கிடைக்கவில்லை. பந்து வீச்சில் அவர்கள் எங்களுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தனர். எல்லா பெருமையும் இங்கிலாந்து வீரர்களையே சாரும். கடினமான சூழலில் எங்களை விட இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டனர். 2-வது இன்னிங்சில் அவர்களின் துடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார்


Add new comment

Or log in with...