காவத்தையில் துப்பாக்கி உற்பத்தி நிலையம் முற்றுகை | தினகரன்

காவத்தையில் துப்பாக்கி உற்பத்தி நிலையம் முற்றுகை

காவத்தையில் துப்பாக்கி உற்பத்தி நிலையம் முற்றுகை-Revolver Making 2 Suspects Arrested
(வைப்பக படம்)

 

துப்பாக்கிகள் உதிரிப்பாகங்களுடன் சந்தேக நபர்கள் கைது

காவத்தை மாதம்பை பிரதேசத்தில் இயங் கி வந்த தன்னியக்க துப்பாக்கி உற்பத்தி நிலையமொன்றை பொலிசார் முற்றுகை யிட்டனர்.

குறித்த இடம், பொலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று (04) முற்றுகையிடப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையத்தை சோதனையிட்ட பொலிசார் தன்னியக்க துப்பாக்கி இயந்திரம் ஒன்று, தயாரித்து முழுமைப்படுத்தப்படாத துப்பாக்கிகள் 2, ரீ- 56 துப்பாக்கி தோட்டாக்கள் 03 உட்பட துப்பாக்கி உதிரிப்பாகங்கள் மற்றும் துப்பாக்கி உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் 35, 29 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர் துப்பாக்கிகளை நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள பலருக்கு பரவலாக துப்பாக்கிகளை விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உடனடியாக செயற்பட்ட பொலிசார் சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய, பிற்பகல் 1.15 மணியளவில் தான் தயாரித்து விற்பனை செய்த துப்பாக்கியொன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை, காவத்தை பிரதேசத்தில் கஹவதுகந்த எனும் இடத்தில் கைது செய்துள்ளனர்.

மேற்படி தன்னியக்க துப்பாக்கி தயாரிப்ப தற்கான தொழிநுட்பங்களை இவர் வெளிநாட்டு சஞ்சிகைகளின் மூலமாக பெற்றுக் கொண்டதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர், இன்று (05) பெல்மதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

காவத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)

 


Add new comment

Or log in with...