வெலிக்கடை கைதிகள் கொலை; பொலிஸ் பரிசோதகர் கைது | தினகரன்

வெலிக்கடை கைதிகள் கொலை; பொலிஸ் பரிசோதகர் கைது

வெலிக்கடை கைதிகள் கொலை; பொலிஸ் பரிசோதகர் கைது-Welikada Riot-Police IP Arrested

 

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் கைது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ, குற்றப்புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் சட்டவிரோதமான ஆயுதங்களை தேடும் பணியின்போது, கைதிகள் திடீரென ஆயுத களஞ்சியத்திற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டனர்.

இதன் போதான பதில் தாக்குதலில் 27 கைதிகள் கொல்லப்பட்தோடு 40 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...