பியார் பிரேமா காதல் ஹிந்தி மொழியிலும்? | தினகரன்

பியார் பிரேமா காதல் ஹிந்தி மொழியிலும்?

பிக்பொஸ் பிரபலங்களான ஹரீஸ் கல்யாண், ரைஸா வில்சன் நடிப்பில் வௌியாகவுள்ள பியார் பிரேமா காதல் திரைப்படத்தை மாற்றுமொழி உரிமையை வாங்குவதற்கு பெரும் போட்டி நிகழ்கிறதாம்.

இளம் இயக்குநர் இலன் இயக்கததில் யுவன் சங்கர் ராஜா மற்றும் கே. புரொடக்சன் ராஜ ராஜன் தயாரிப்பில் காதலை மையமாக கொண்டு இப்படம் தயாராகி வருகிறது.

ஏற்கனவே 'ஹை ஒன் லவ்' என்று ஆரம்பிக்கும் பாடல் ஏற்கனவே இணையதளங்களில் வௌியாகி பிரபலமாகி வரும் நிலையில் படப்பிடிப்புக்களும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்.

பிரபல ஹிந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள்  பியார் பிரேமா காதல் ஹிந்திப் பட உரிமையை வாங்குவதற்கு போட்டிப்போட்டுக்கொண்டு தயாராகி வருகின்றனவாம். 


Add new comment

Or log in with...