Friday, April 26, 2024
Home » உலகெங்கும் வாழும் நலிவுற்ற மக்களுக்கு ‘மன்னர் சல்மான்

உலகெங்கும் வாழும் நலிவுற்ற மக்களுக்கு ‘மன்னர் சல்மான்

- சர்வதேச மத்திய நிலையம்' வழங்கும் மனிதாபிமான உதவிகள்

by sachintha
November 10, 2023 11:27 am 0 comment

புனர்வாழ்வு மற்றும் மனிதநேய சேவைகளுக்கான மன்னர் சல்மான் சர்வதேச மத்திய நிலையத்தை தற்போதைய சவூதி அரேபிய மன்னர் மலிக் ஸலமான் 2015.05.12 அன்று ஹிஜ்ரி 1436 றஜப் 27 இல் உத்தியோகபூர்மாக ஆரம்பித்து வைத்தார். அவர் மன்னராக சத்தியப்பிரமாணம் செய்தவுடன் ஆரம்பித்த முதல் நலன்புரித் திட்டம் இதுவாகும்.

இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டு பத்து வருடங்களும் கடந்திருக்காத நிலையில் தற்போது இந்நிறுவனம் உலகின் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை நிறுவி அதனூடாக அந்தந்த நாடுகளுக்கு இன,மத வேறுபாடுகளுக்கப்பால் மனிதநேயத்தின் பேரில் பல்வேறு தனிநபர், சமூகநலத் திட்டங்களையும், பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வளித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

உலகின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டோருக்கான புனர்வாழ்வு மீள்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடுசெய்தல், இலவச மருத்துவ முகாம்களை நடத்துதல், இருப்பிட வசதியற்றோருக்கு இலவசமாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தல், கடன் சுமைகளால் சிறைவாசம் அனுபவிப்போரை அக்கடன்தொகையை அடைத்து விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்தல், பாடசாலைகளை நிர்மாணித்துக் கொடுத்தல், கல்விசார் உதவிகள், வறிய குடும்பங்களுக்கு மின்சாரம், குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு றமழான், பெருநாள்காலங்களில் உலர் உணவுப் பொதிகளை இலவசமாக வினியோகித்தல், மருத்துவமனைகளுக்குமருத்துவ சாதனங்கள் மற்றும் சுகாதார தேவைகளை வழங்குதல், சத்திரசிகிச்சைகளுக்காக வசதியற்றோருக்கு நிதியுதவி செய்தல், திடீர் அனர்த்தங்கள், மனிதப் பேரவலங்களின் போது உதவி செய்தல் போன்ற பணிகளில் இந்நிறுவம் ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம் இதவரை ஆற்றியுள்ள முக்கியமான சில பணிகள் வருமாறு:

50 இற்கும் மேற்பட்ட வறிய நாடுகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்குசுமார் 20 ஆயிரம் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் 612 திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு திட்டத்தின் மூலமும் தலா 50,000 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. இலங்கையில் முதல்தடவையாக கடந்த வருடம் றமழான் மாதத்தில் கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியில் வசிப்போருக்கு இவ்வுலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

550 மருத்துவ சிகிச்சை மற்றும் ஆரோக்கிய நலத்திட்டங்களை பல்வேறு நாடுகளிலும் நடத்தியுள்ளது. இதுகாலவரை 16,000 நோயாளர்களுக்கு இவ்வமைப்பினூடாக கண்சத்திரசிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. காத்தான்குடி தளவைத்தியசாலையில் 650 நோயாளர்களுக்கும், தென்மாகாணத்தில் 650 ஏனைய இன மக்களுக்கும் இச்சத்திரசிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

திடீர் அனத்தங்கள், பூகம்பம், வெள்ள அபாயம் போன்ற அசாதாரண நிகழ்வுகளின் போது களத்துக்கு மீட்புப்பணிக் குழுக்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டுவதுடன், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் 15 திட்டங்களை இதுவரை இந்நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்குள் துருக்கி, மொரோக்கோ, ஆப்கான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், வெள்ள அனர்த்தங்களின் போது இந்நாடுகளுக்கான விசேட விமான சேவை ஆரம்பிக்கப்பட்டு மீட்புக்குழுக்களும் (06ஆம் பக்கம் பார்க்க)

மெளலவி ஏ.ஜி.எம் ஜலீல்…

மதனி, (பணிப்பாளர், அல்ஈமான் முன்மாதிரி கல்வி நிலையம்)

காத்தான்குடி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT