யாழ். குடாநாட்டில் இனவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள் | தினகரன்

யாழ். குடாநாட்டில் இனவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள்

 

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இனவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ். நகரம், யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள

குறித்த சுவரொட்டிகளில் "சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களே இனவாத விஷத்தில் அழிவோமா? ஒன்றிணைந்து உண்மையான எதிரியைத் தோற்கடிப்போமா?" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சுவரொட்டிகளின் கீழ் "சம உரிமை இயக்கம்" எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செல்வநாயகம் ரவிசாந்) 

 


Add new comment

Or log in with...