முதலாம் கட்ட தபால் மூல வாக்குப் பதிவு இன்று | தினகரன்

முதலாம் கட்ட தபால் மூல வாக்குப் பதிவு இன்று

 

முதலாம் கட்ட தபால் மூல வாக்குப்பதிவு இன்று (22) இடம்பெறுகின்றது.

தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இன்று (22) தபால் மூல வாக்குப் பதிவு இடம்பெறுகின்றது.

இரு கட்டங்களாக மூன்று நாட்களில் இடம்பெறும் தபால் மூல வாக்களிப்பு இன்றும் (22) ஏனைய அரச அலுவலகங்கள், திணைக்களங்களில் எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளன.

நாடு முழுவதும் 5 இலட்சத்து 60,536 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 1 கோடி 57 இலட்சத்து 68,814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...