Friday, May 31, 2024
Home » கொவிட் தடுப்பூசிகளை திரும்ப பெற அஸ்ட்ரா செனகா தீர்மானம்

கொவிட் தடுப்பூசிகளை திரும்ப பெற அஸ்ட்ரா செனகா தீர்மானம்

by Gayan Abeykoon
May 9, 2024 4:12 am 0 comment

பக்கவிளைவுகள் ஏற்படும்  ஆபத்துள்ளமையை ஏற்றுக் கொண்டுள்ளதால், உலகளவில் தமது கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியைத் திரும்பப் பெற அஸ்ட்ரா செனகா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள்     கண்டுபிடித்தன.  இதில், பிரித்தானியாவைச் சேர்ந்த அஸ்ட்ரா செனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசியே  பரவலாக செலுத்தப்பட்டன.   இதற்கிடையே, அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ரா செனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில்,  கொவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்க விளைவை ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்டது.    கொவிஷீல்ட் தடுப்பூசி, இலேசாக பக்க விளைவுகளை தருமென அந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு  அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.    கொவிஷீல்ட் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பற்றிய ஆய்வு மற்றும் மருத்துவ நிபணர் குழுவை அமைக்குமகாகறு  கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா செனகா நிறுவனம் அறிவித்துள்ளது.   மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில்  கொவிஷீல்ட் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்  ஆபத்துள்ளதாக கூறப்படுகிறது. இரத்த உறைவு (Blood clots) , blood Platelets எண்ணிக்கை குறைவு  உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட  ஆபத்துள்ளதாக  பிரித்தானிய நீதிமன்றத்தில் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT