Friday, May 17, 2024
Home » நாட்டில் 10 வீதமானோருக்கு நீரிழிவு நோய்: கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அக்கறை

நாட்டில் 10 வீதமானோருக்கு நீரிழிவு நோய்: கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அக்கறை

by sachintha
April 30, 2024 7:25 am 0 comment

நாட்டில், பத்து வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் சிரேஷ்ட மருத்துவ நிபுணர் டாக்டர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே, பிரதான காரணமாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: எமது நாட்டில் சுமார் 10 வீதமானோருக்கு சிறுநீரக நோய் உள்ளது.

உண்மையில் இந்நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்நோய்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றல், ஆரோக்கிய வாழ்வை கடைப்பிடித்தல் , உணவில் உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெயின் அளவைக் குறைப்பதன் மூலமாகவும் இந்நோயிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.

நாளொன்றுக்கு மூன்றரை லீற்றர் நீரை அருந்துவதும், இந் நோயை தடுப்பதற்கு சிறந்த வழிமுறையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT