Tuesday, May 21, 2024
Home » இரண்டு நாள் விஜயமாக ஜப்பான் அமைச்சர் வருகை

இரண்டு நாள் விஜயமாக ஜப்பான் அமைச்சர் வருகை

by sachintha
April 30, 2024 7:15 am 0 comment

இரண்டு தினங்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானிய வெளி விவகார அமைச்சர் யோகோ கமிகாவா, எதிர்வரும் மே (04) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்றும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளது. நான்கு மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாட்டில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளார். அத்துடன் வெளி விவகார அமைச்சர் அலி சப்ரியை வெளி விவகார அமைச்சில் சந்திக்கும் அவர், உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT