Sunday, May 5, 2024
Home » நியூயோர்க் கொன்சியூலர் அலுவலகத்தில் இந்திய முஸ்லிம்களின் பெருநாள் வைபவம்

நியூயோர்க் கொன்சியூலர் அலுவலகத்தில் இந்திய முஸ்லிம்களின் பெருநாள் வைபவம்

by Rizwan Segu Mohideen
April 25, 2024 5:38 pm 0 comment

அமெரிக்காவில் வாழும் இந்திய முஸ்லிம் சமூகத்தினர் நோன்பு பெருநாள் வைபவமொன்றை நியூயோர்க்கிலுள்ள இந்தியாவுக்கான கொசியூலர் ஜெனரல் அலுவலகத்தில் ஏப்ரல் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளனர்.

நியூயோர்க்கிற்கான இந்தியாவின் பதில் கொன்சியூலர் ஜெனரல் கலாநிதி வருண் ஜெப் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவம், இந்திய முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையையும் வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

அமெரிக்க செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர், அமெரிக்காவிலுள்ள இந்திய முஸ்லிம்களுக்கு இவ்வைபவத்தின் போது வீடியோ காணொளி ஊடாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்திய முஸ்லிம் சமூக அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் இல்லியாஸ் குரைஷி உள்ளிட்ட ஏனைய அங்கத்தவர்கள் சமூகத்திற்கு ஆற்றிவரும் சேவைகள் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளன.

இவவைபவத்தில் உரையாற்றிய குரைஷி, நோன்பு பெருநாள் மனித நேயம், ஈகை, இரக்கம், பெருந்தன்மை மற்றும் ஒற்றுமையின் பெறுமானங்களை எடுத்துக் கூறுகிறது. அதேநேரம் இந்தியாவிலுள்ள 200 மில்லியன் முஸ்லிம்களை இங்குள்ள முஸ்லிம்களே அமெரிக்காவில் பிரதிநித்துவப்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்றுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய நியோர்க் சட்ட சபை உறுப்பிர் ஜெனீபர் ராஜ்குமார் அமெரிக்காவிலுள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தினருடனான தமது உறவையும் நெருக்கத்தையும் எடுத்துக் கூறியதோடு, நியூயோர்க் மாநிலத்திலுள்ள பொது பாடசாலைகளில் ஹலால் உணவுக்கான விருப்பங்களை விரிவுபடுத்தவும் தொழுகைக்கு அழைக்கும் பணில் ஈடுபட்டிருப்பவருக்கு கொடுப்பனவொன்றை வழங்கவும் நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளன என்றுள்ளார்.

இந்திய முஸ்லிம் சமூகத்தினரின் கலாசார நிகழ்ச்சிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT