Home » அமைதிக்குப் பின் பூமியை அழைத்தது ‘வோயேஜர்–1’

அமைதிக்குப் பின் பூமியை அழைத்தது ‘வோயேஜர்–1’

by Gayan Abeykoon
April 24, 2024 12:44 pm 0 comment

பிரபஞ்சத்தின் மிகத் தொலைதூரத்தில் இருக்கும் மனிதனால் தயாரிக்கப்பட்ட பொருளான அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் வோயேஜர்–1 விண்கலம் பல மாதங்கள் சம்பந்தம் இல்லாத தகவல்களை அனுப்பிய நிலையில் முதல் முறை பயன்படுத்த முடியுமான தகவலை பூமிக்கு அனுப்பி உள்ளது.

இந்த விண்கலம் 2023 நவம்பர் 14 தொடக்கம் பூமிக்கு வாசிக்க முடியுமான தரவுகளை அனுப்புவதை நிறுத்தியதோடு, தமது கட்டளைகளை அது தொடர்ந்து பெறுகிறதா என்பதை கட்டுப்பாட்டாளர்களுக்கு உறுதி செய்ய முடியாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த விண்கலத்தின் எஞ்சின் அமைப்பின் தரவுகளை பூமிக்கு அனுப்பி இருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது. அடுத்த கட்டமாக அது விஞ்ஞான தரவுகளை அனுப்ப ஆரம்பிக்கும் என்றும் நாசா கூறியது.

1977 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட வோயேஜர்–1 விண்கலம் 2012 இல் சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் விண்மீன் இடைவெளிப் பகுதிக்குள் பிரவேசித்ததோடு அது தற்போது பூமியில் இருந்து 15 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. பூமியில் இருந்து அனுப்பப்படும் செய்தி இந்த விண்கலத்தை சென்றடைய 22.5 மணி நேரம் எடுக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT