Monday, May 6, 2024
Home » கைத்தொழில் தொழில்முனைவோர் துறைக்கு வழிநடத்துவதற்கு திட்டம்
பல்கலைக்கழக மாணவர்களை

கைத்தொழில் தொழில்முனைவோர் துறைக்கு வழிநடத்துவதற்கு திட்டம்

ருஹுணு பல்கலைக்கழகம் ஆரம்பித்தது

by Gayan Abeykoon
April 24, 2024 9:17 am 0 comment

இலங்கை பல்கலைக்கழக மாணவர்களை கைத்தொழில் தொழில்முனைவோர் துறைக்கு வழிநடத்தும் திட்டத்தை ருஹுணு பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளது. இதன் அடிப்படையில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள், கட்டுபெத்த கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு களப் பயணத்தை மேற்கொண்டனர்.

நாட்டில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்கும் நோக்கில் தொழில் முனைவோர் கலாசாரத்தை கட்டியெழுப்பும் வகையில் கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான கைத்தொழில் தொழில்முனைவோர்  திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விவசாயம் மற்றும் நடைமுறையில் அதற்கான பயிற்சிகள் பற்றிய வழிகாட்டல் மற்றும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும இந்நிகழ்வின் போது கருத்து தெரிவிக்கையில்,

“கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரணவின் தலைமையின் கீழ் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அமைப்புகளை மையமாக கொண்டு தொழில் முனைவோர் கலாசாரத்தை ஊக்குவிக்கும் பொறுப்பு இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இந்த தொழில் முனைவோர் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இதற்கமைவாக  நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இந்த தொழில் முனைவோர் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாயப் பொருளாதாரம் மற்றும் விவசாய வணிகத்துறையில் புதிய பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் பல்கலைக்கழக மாணவர் தொழில் முயற்சியாளர் செயலமர்வின் கோட்பாட்டு மற்றும் நடைமுறை ஆரம்பக்கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.  இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பி.சமரகோன், தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் ரேணுகா ஜயலத் ஆகியோர் இதன்போது உரையாற்றினர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT