Home » ஹமாஸ் தலைவருடன் எர்துவான் பல மணி நேரம் பேச்சுவார்த்தை

ஹமாஸ் தலைவருடன் எர்துவான் பல மணி நேரம் பேச்சுவார்த்தை

by damith
April 22, 2024 12:16 pm 0 comment

காசாவில் இஸ்ரேலின் போருக்கு மத்தியில் ஹமாஸ் தலைவர் இஸ்மையில் ஹனியேவுடன் ஸ்தன்பூலில் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான், பலஸ்தீனர்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். ‘இந்த செயற்பாட்டில் பலஸ்தீனர்கள் ஒற்றுமையுடன் செயற்படுவது முக்கியமானதாகும். வெற்றிக்கான பாதை மற்றும் இஸ்ரேலுக்கு வலுவான பதில் கொடுப்பது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிலேயே தங்கியுள்ளது’ என்று எர்துவான் குறிப்பிட்டார்.

காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பை துருக்கி தொடர்ந்து கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் கடந்த 2011 தொடக்கம் துருக்கியில் ஹமாஸ் அலுவலகம் ஒன்றை நடத்தி வருவதோடு ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் அங்கு அடிக்கடி பயணித்து வருகிறார். ‘தையிப் எர்துவானாகிய நான் மாத்திரமே இருந்தாலும் கூட, இறைவன் எனக்கு ஆயுளைத் தந்திருக்கும் வரையில் பலஸ்தீன போராட்டத்தை பாதுகாப்பதற்கும் ஒடுக்கப்பட்ட பலஸ்தீனர்களின் குரலாகவும் நான் தொடர்ந்து செயற்படுவேன்’ என்று எர்துவான் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT