Thursday, May 2, 2024
Home » சாய்ந்தமருது கடலரிப்பு; இரண்டாவது கட்டமாக அணை இடும் நடவடிக்கை

சாய்ந்தமருது கடலரிப்பு; இரண்டாவது கட்டமாக அணை இடும் நடவடிக்கை

by Gayan Abeykoon
April 19, 2024 10:43 am 0 comment

அம்பாறையின் சாய்ந்தமருது மருதூர்சதுக்கம் மற்றும் அதனை அண்டியுள்ள கடற்றொழில் பிரதேசம் கடலரிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு அணை இடும் இரண்டாம் கட்டப் பணி நேற்று முன்தினம் புதன்கிழமை (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த வேலைத்திட்டத்தை தேசிய காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆரம்பித்து வைத்தார்.

கடலரிப்பால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக சாய்ந்தமருது இயற்கை நேசிக்கும் மன்ற செயற்பாட்டாளர்கள் முகநூல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதற்கான வேலைத்திட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.ஆஷிக், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ஜி.எம்.அஸ்மி, கரையோரம் பேணல் திணைக்களம் மற்றும் கரையோரம் மூலவள திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.துளசிதாசன், சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட அதிகாரி முஹம்மத் நளீர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.நுஸ்ரத் அலி, கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

சம்மாந்துறை கிழக்கு தினகரன், மாளிகைக்காடு குறூப் நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT