Sunday, April 28, 2024
Home » அகில உலக இராமகிருஷ்ணமிஷன் பொதுச் செயலாளர் வருகை
காரைதீவுக்கு

அகில உலக இராமகிருஷ்ணமிஷன் பொதுச் செயலாளர் வருகை

by Gayan Abeykoon
March 29, 2024 9:45 am 0 comment

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அகில உலக இராமகிருஷ்ணமிஷன் துணை பொதுச் செயலாளர் மத்சுவாமி போதசாரானந்தஜி மகராஜ், சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (27) மாலை விஜயம் செய்தார்.

சுவாமி விபுலானந்த அடிகளாரின் பிறந்த தினத்தில் அவர் காரைதீவுக்கு விஜயம் செய்ததுடன், சுவாமி இராமகிருஷ்ணமிஷன் சாரதா நலன்புரி நிலையத்துக்கும் விஜயம் செய்து, சாரதா நிலைய செயற்பாடுகளையும் அவதானித்தார்.

இதன் பின்னர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் இல்லத்துக்கும் அவர் விஜயம் செய்து, சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்ததுடன், விசேட பூஜையும் நடத்தினார்.

காரைதீவு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT