Monday, April 29, 2024
Home » அமைச்சர் ஜீவன் பிறந்ததின வாழ்த்து
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு

அமைச்சர் ஜீவன் பிறந்ததின வாழ்த்து

by mahesh
March 2, 2024 6:00 am 0 comment

மலையக மறுமலர்ச்சிக்கான பயணத்தின் போது, இங்கு வாழும் தொப்புள்கொடி உறவுகளுக்கு தமிழக அரசாங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வழங்குமென்று உறுதியாக நம்புவதாக, இ.தொ.கா. வின் பொதுச் செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன் இலங்கை மக்களுக்கு தமிழக அரசாங்கம் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழ்மொழியைக் காப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் காலத்தின் கட்டாய தேவையென்றார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்ததினத்தையிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார். அவ்வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்தாவது, “இன்று அகவை தினம் காணும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் தேக ஆரோக்கியத்துடன் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். தமிழக மக்களால் மட்டுமல்ல, உலக வாழ் தமிழ் மக்களால் நேசிக்கப்படும் முதல்வர் ஸ்டாலினின் வெற்றி பயணம் தொடரவும் வாழ்த்துக தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT