Friday, May 3, 2024
Home » பாக். தேர்தல் மோசடி: மூத்த அதிகாரி ஒப்புதல்

பாக். தேர்தல் மோசடி: மூத்த அதிகாரி ஒப்புதல்

by damith
February 19, 2024 12:03 pm 0 comment

பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறிய மூத்த அதிகாரி ஒருவர் பதவி விலகியுள்ளார்.

இராணுவத் தலைமையகம் இருக்கும் ராவல்பிண்டி நகரில் ஆணையாளராகப் பணியாற்றிய லியாக்கட் அலி சத்தா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்;. வாக்களிப்பின்போது நடந்த மோசடியைத் தாம் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரிடம் சரணடையப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தக் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணைக்குழு மறுத்துள்ளது. எனினும் விசாரணை நடத்தப்படும் என்று அது தெரிவித்தது.

பாகிஸ்தானில் தேர்தல் நடந்து 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு போராட்டங்கள் தீவிரமடைகின்றன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் சிறை அனுபவிக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் அதிக இடங்களை வென்றபோதும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எந்தத் தரப்பம் பெறவில்லை.

இந்தத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். எனினும் இந்தத் தேர்தலில் இரண்டாம் இடத்தை பெற்ற நவாஸ் ஷரீப் கட்சி ஆறு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி அரசு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT