Friday, May 17, 2024
Home » வரலாற்றில் முதன் முறை: ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தும் சட்டத்தரணி’ அந்தஸ்து

வரலாற்றில் முதன் முறை: ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தும் சட்டத்தரணி’ அந்தஸ்து

- ஜனாதிபதியினால் வழங்கி வைப்பு

by Prashahini
May 2, 2024 10:04 pm 0 comment

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தும் சட்டத்தரணி’ (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதிலக, எஸ்.என்.எம். குணவர்தன உள்ளிட்டோருக்கே குறிந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சட்டத் தொழிலில் சிறந்து விளங்குகின்றமை மற்றும் உயர்வான பண்புகளை வௌிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் சட்டத்தரணிகள் ஆற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், 2023 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் குறித்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT