Sunday, May 5, 2024
Home » ஸ்டெபனி சிறிவர்தனவை தமது வர்த்தகநாம தூதராக அறிமுகப்படுத்தும் Pure Gold by Tiesh

ஸ்டெபனி சிறிவர்தனவை தமது வர்த்தகநாம தூதராக அறிமுகப்படுத்தும் Pure Gold by Tiesh

by Rizwan Segu Mohideen
February 16, 2024 6:26 pm 0 comment

தனது ஒப்பற்ற கைவினைத்திறன் மற்றும் காலத்திற்கு பொருத்தமான வடிவமைப்பு ஆகியன காரணமாக அங்கீகாரம் பெற்ற ஒரு புகழ்பெற்ற நகை வர்த்தகநாமமான Pure Gold by Tiesh (தியேஷ்), உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தைக் கொண்ட பிரபலமும், பன்முகக் கலைஞருமான ஸ்டெபனி சிறிவர்தனவை தமது வர்த்தகநாம தூதராக நியமித்துள்ளதை பெருமையுடன் அறிவித்துள்ளது.

18 கரட் மற்றும் 22 கரட் தங்க நகைகளின் வரிசைகளுக்கு பெயர் பெற்ற Pure Gold by Tiesh, நேர்த்தியான கைவினைத்திறன் மற்றும் வடிவமைப்பின் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது. இந்த வர்த்தகநாமமானது, பல்வேறு விதமான ஒப்பற்ற காதணிகள், நெக்லஸ்கள், வளையல்கள், மோதிரங்கள் உள்ளிட்டவற்றைக் வெளியிட்டு வருகிறது. இவை யாவும் நேர்த்தி, தனித்துவம் கொண்டவையாக, ரோஸ் கோல்ட், வெள்ளை தங்கம், மஞ்சள் தங்கம் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.

தனது இயற்கையான அழகு மற்றும் ஸ்டைலுக்காக உலகளாவிய ரீதியில் போற்றப்படும் ஒரு பிரபலமாக விளங்குகின்ற ஸ்டெபனி சிறிவர்தன, தாம் இவ்வர்த்தகநாம தூதராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், “Pure Gold by Tiesh நிறுவனத்தின் வர்த்தகநாம தூதராகவும் அதன் முகமாகவும் நியமிக்கப்பட்டமை தொடர்பில் நான் மிக மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். Tiesh உடனான எனது உறவு மீண்டும் செல்கிறது. நான் பல ஆண்டுகளாக அதன் ஒரு விசுவாசமான வாடிக்கையாளராக இருந்து வருகிறேன். நான் எப்போதும் விரும்பி இரசித்த ஒன்றாக Tiesh இன் தரம் விளங்குகின்றது. ஒவ்வொரு நகையையும் கச்சிதமாக செய்வதில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுக்காக நான் அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.” என்றார்.

Pure Gold by Tiesh ஆனது பாரம்பரிய கைவினைத்திறனை நவீன வடிவமைப்பின் அழகியலுடன் ஒன்றிணைத்து, புது யுகப் பெண்களின் விவேகமான இரசனைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. ஒவ்வொரு நகையையும் பல்வேறு வழிகளில் அணிய உதவுவதன் மூலமான பல்வகைத் தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பே, Pure Gold by Tiesh தூய தங்கத்தை தனித்துவமாக்குகின்றது. உள்ளீர்க்கப்பட்ட அர்ப்பணிப்புடன், அழகிய இந்து மணமகள்கள் முதல் முஸ்லிம் மணப்பெண்கள் மற்றும் பாரம்பரிய கண்டி மணப்பெண்கள் வரை அனைவருக்கும் அவர்களது தனித்துவமான அம்சங்களை வழங்குவதன் மூலம், பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மதங்களுக்கு ஏற்ற வகையிலான ஒரு வர்த்தகநாமமாக பெருமை கொள்கிறது.

Pure Gold by Tiesh இன் ஒவ்வொரு நகையும் தனித்துவமானதாகும். படைப்பாற்றலுக்காக இவ்வர்த்தகநாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்டிய ஸ்டெபனி மேலும் கருத்து வெளியிடுகையில், “படைப்பாற்றலுக்கான தனித்துவமான அர்ப்பணிப்பு மற்றும் அவர்களது முடிவில்லா, தனிப்பட்ட ஸ்டைலில் அமைந்த தெரிவுகள் மூலம் ஒவ்வொரு தருணத்தையும், ஒவ்வொரு கதையையும் சிறப்பானதாக்குவதன் மூலம் Pure Gold by Tiesh இன் மீது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். Pure Gold by Tiesh வழங்கும் தரம் மற்றும் சேவை என்பன ஒப்பிட முடியாதவையாகும். நீங்கள் Tiesh இற்குச் செல்லும்போது, வழக்கமான நகைக் கடைக்குச் செல்வது போன்று நீங்கள் உணரமாட்டீர்கள். உங்கள் வீட்டிற்கு செல்வது போன்று நீங்கள் உணர்வீர்கள். பரிச்சயமானவர்கள் போன்ற வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் உணர்வு இங்கு எப்போதும் உண்டு. அவர்கள் உங்கள் தனிப்பட்ட இரசனையைப் புரிந்துகொண்டு அதை தனித்துவமாக வழங்கி, தனித்துவ அனுபவமாக மாற்றுகிறார்கள். Pure Gold by Tiesh குடும்பத்தின், ஒரு அங்கமாக இருப்பதனை நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அந்த வகையில் மேலும் பல அற்புதமான விடயங்களை எதிர்காலத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.” என்றார்.

Pure Gold by Tiesh வழங்கும் அபூர்வமான தயாரிப்புகள், இவ்வர்த்தகநாமத்தின் ஒவ்வொரு உற்பத்திக்கும் புத்தாக்கமான உணர்வைச் சேர்க்கும் வகையில், மாற்றத்தை ஏற்படுத்தும் அம்சங்களை இணைத்து, நுணுக்கத்தையும், காலத்தால் அழியாத கவர்ச்சியையும் வெளிப்படுத்துகின்றன. பாரம்பரிய மற்றும் நவீன, பிரபலம் மிக்க அம்சங்களை ஒன்றிணைத்து, வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தெரிவுகள் மூலம் தனித்துவத்தை வெளிப்படுத்த அனுமதிப்பதன் மூலம், அதன் போட்டியாளர்களிடையே இருந்து Pure Gold by Tiesh வர்த்தகநாமத்தை தனித்துவமாக்குகிறது.

Pure Gold by Tiesh பற்றிய மேலதிக தகவலுக்கு, 253 R.A. De Mel Mawatha, Colombo-03 இல் உள்ள அதன் காட்சியறைக்கு விஜயம் செய்யுங்கள்.

Pure Gold by Tiesh பற்றி
தனது ஒப்பற்ற கைவினைத்திறன் மற்றும் காலத்தால் அழியாத வடிவமைப்புகளுக்காக புகழ்பெற்ற நகை வர்த்தகநாமமாக Pure Gold by Tiesh விளங்குகின்றது. இத்தாலிய 18 கரட் நகைகள் மற்றும் 22 கரட் தங்க தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற இந்த வர்த்தகநாமம், பாரம்பரிய கைவினைத்திறனை நவீன வடிவமைப்பின் அழகியலுடன் ஒன்றிணைத்து, புது யுகப் பெண்களின் விவேகமான இரசனைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. பல்வகைத் தன்மை
உள்ளீர்க்கப்பட்ட அர்ப்பணிப்புடன், அழகிய இந்து மணமகள் முதல் முஸ்லிம் மணப்பெண்கள் மற்றும் பாரம்பரிய கண்டி மணப்பெண்கள் வரை அனைவருக்கும் அவர்களது தனித்துவமான அம்சங்களை வழங்குவதன் மூலம், பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மதங்களுக்கு ஏற்ற வகையிலான ஒரு வர்த்தகநாமமாக பெருமை கொள்கிறது. மேலதிக தகவலுக்கு, tiesh.lk/pure-gold-by-tiesh/

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT