Thursday, May 9, 2024
Home » பொலிஸ் கான்ஸ்டபிள் மீது வல்லுறவு; கற்பிட்டி OIC பணி இடைநீக்கம்

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது வல்லுறவு; கற்பிட்டி OIC பணி இடைநீக்கம்

- நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை

by Rizwan Segu Mohideen
February 15, 2024 7:47 pm 0 comment

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடம் பாலியல் ரீதியாக முறையற்ற வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கமைய, குளியாப்பிட்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ அத்தியட்சகரினால் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த நபர் தொடர்பில் புத்தளம் நீதவான் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்த பொலிஸார் அவரை நேற்றுமுன்தினம் (13) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரூ. 500,000 கொண்ட சரீரப் பிணையில் விடுவித்த நீதவான், பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் குளியாப்பிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Kalpitiya-Police-OIC-Suspended-Over-Sexual-Assault-Granted-Bail

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT