Home » சுங்கத்தில் அனுமதி பெறாத 400 வாகனங்கள் மோசடியாக பதிவு

சுங்கத்தில் அனுமதி பெறாத 400 வாகனங்கள் மோசடியாக பதிவு

07 அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல்

by damith
February 12, 2024 7:15 am 0 comment

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த 05 உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 07 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத பெருமளவிலான வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பிலேயே மேற்படி ஏழு பேருக்கு எதிராக அந்த ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில் அனுமதி வழங்கப்படாத சுமார் 400 வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பதிவு செய்துள்ளமை தொடர்பில் ஆணைக் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளதையடுத்தே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 156 வாகனங்கள் தொடர்பான தகவல்களை ஆணைக்குழு அதிகாரிகள் இனம் கண்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை சொகுசு வாகனங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இந்த வாகனங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்துக்கு பாரிய வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.இத்தகைய பின்னணியில் மேற்படி வாகனங்களில் 07 வாகனங்களை தற்போதைய உரிமையாளர்களிடமிருந்து பெற்று சுங்கத்தில் ஒப்படைக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி 06 வாகனங்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 05 வாகனங்கள் இலங்கை சுங்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT