Monday, April 29, 2024
Home » வருடாந்த கலால் வரி அனுமதிப்பத்திர கட்டணங்களில் மீண்டும் திருத்தம்

வருடாந்த கலால் வரி அனுமதிப்பத்திர கட்டணங்களில் மீண்டும் திருத்தம்

பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுல்

by damith
February 5, 2024 8:20 am 0 comment

வருடாந்த கலால் வரி அனுமதிப்பத்திரத்திற்காக அறவிடப்படும் கட்டணங்கள் மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கலால் வரி கட்டளைச் சட்டத்திற்கிணங்க ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் கலால் வரி அனுமதிப்பத்திரக் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த அதிகாரி எவ்வாறாயினும் மேற்படி திருத்தங்கள் தொடர்பில் மேற்படி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்ெகாள்வோர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் ஒரு தடவை அந்த வருடாந்த அனுமதிப்பத்திரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி இரண்டு கோடியே 50 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருந்த வருடாந்த அனுமதிப்பத்திர கட்டணத்தை 20 இலட்சம் ரூபாவாக குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய கட்டண திருத்தத்திற்கிணங்க கைத்தொழில் துறை அனுமதிக்காக ஒரே தடவையில் அறவிடப்படும் கட்டணம் இரண்டு கோடியே 50 இலட்சம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னங்கள்ளு போத்தல் உற்பத்திக்காக 10 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட வருடாந்த அனுமதிப்பத்திர கட்டணம் 15 இலட்சமாக குறைவடைந்துள்ளது. பனங்கள்ளு போத்தல் உற்பத்திக்கான அனுமதிக்கட்டணம் புதிய திருத்தங்களுக்கிணங்க 5,00,000 மாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வினாகிரி உற்பத்திக் கட்டணம் 25,00,000 இருந்து 5,00,000 மாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரேதடவையில் அறவிடப்படும் கட்டணம் 25,00,000 மாக திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT