Sunday, April 28, 2024
Home » சர்ச்சைக்குரிய பூனம் பாண்டே உயிருடன்

சர்ச்சைக்குரிய பூனம் பாண்டே உயிருடன்

- கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவே தெரிவித்தேன்

by Rizwan Segu Mohideen
February 3, 2024 1:16 pm 0 comment

தான் மரணிக்கவில்லை எனவும் கர்ப்பப்பை புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக அவ்வாறு தெரிவித்ததாக சர்ச்சைக்குரிய நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது Instagram கணக்கில் Live வந்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது பற்றி மேலும் பல பதிவுகளை அவர் பதிவிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)


On Feb 02: 1.18pm

சர்ச்சைக்குரிய நடிகை பூனம் பாண்டே காலமானார் (UPDATE)

– கர்ப்பப்பை புற்று நோயால் 32 வயதில் மரணம்

சர்ச்சைக்குரிய நடிகையான பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக இன்று (02) காலை காலமானார்.

1991 மார்ச் 11ஆம் திகதி பிறந்த அவர் மரணிக்கும் போது 32 வயதாகும்.

இந்நிலையில் இன்று காலை பூனம் பாண்டேவின் உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் காலமானதாக அவரது முகாமையாளர் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

ஒரு மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த பூனம் பாண்டே, 2011 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றால் நிர்வாணமாக வீடியோ வெளியிடுவேன் எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பிரபலமடைந்தார்.

2012 இல் IPL இல் கொல்கத்தா அணி வென்றால் அரை நிர்வாண வீடியோ வெளியிடுவதாக தெரிவித்து, அதனை அவ்வாறே செய்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வைரலானார்.

2013 இல் நஷா எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்த அவர், தனக்கனெ இணையத்தளமொன்றை ஆரம்பித்து அதில் கட்டணம் செலுத்துபவர்களுக்காக அரை நிர்வாண வீடியோக்களை பதிவிட்டு வந்ததார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் கணக்குகளை வைத்துள்ள அவர், தனது புகைப்படங்களை வெளியிடுதல் மற்றும் குறித்த இணையத்தளத்தை பிரபலப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT