Sunday, May 12, 2024
Home » இலங்கை விவசாயத்தில் புரட்சி; லஸ்ஸனவின் முன்னோடி முயற்சி

இலங்கை விவசாயத்தில் புரட்சி; லஸ்ஸனவின் முன்னோடி முயற்சி

by Rizwan Segu Mohideen
January 19, 2024 1:28 pm 0 comment

விவசாயத்தில் முன்னணியில் உள்ள லஸ்ஸன அக்ரி இன்னோவேஷன்ஸ்  உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு புத்தம் புதிய, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தொலைநோக்கு நிறுவனமாக திகழ்கிறது. இந்த விஸ்தரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம், லஸ்ஸன அக்ரி புத்தாக்கங்களை  வளர்ப்பதில் உறுதியாக உள்ளது. அவர்களின் அர்ப்பணிப்பு உற்பத்தி வரம்பை மேம்படுத்துவதற்கு அப்பால் அமைந்துள்ளது. இது முழு விவசாய விநியோகச் சங்கிலியையும் மற்றும் புத்தாக்கமான  தீர்வுகளையும்  உள்ளடக்கியது. புத்தம் புதியதாக  மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும்  தேவையான உணவு வகைகளுக்குமான  அதிகரித்து வரும் நுகர்வோர் கேள்விக்கு சிறந்த தீர்வினை வழங்கும் வகையில் நிறுவனமானது செயற்பட்டு வருகிறது

ஒரு அற்புதமான நடவடிக்கையாக, இலங்கையில் நவீன விவசாயத்தை மறுவடிவமைக்க லஸ்ஸன அக்ரி இன்னோவேஷன்ஸ்  அமைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, குறைந்த தரம், அதிகப்படியான இரசாயன பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்  வகையில் அமைந்துள்ள இந்த  திட்டமானது விவசாயிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம், பசுமை இல்லங்கள் மற்றும் துணைப் பொருட்களை வழங்குவதுடன், உத்தரவாதமான வருவாயை உறுதி செய்வதற்கான மீண்டும் கொள்வனவு செய்தல்  Buyback  ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது. அக்ரிபிளாஸ் ட்   ப்ரொடெக்டட்   கல்டிவேசன் பிரைவேட்  லிமிடெட்  [Agriplast protected cultivation PVT LTD] உடனான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும், இது உயர் தொழில்நுட்ப மற்றும் மத்திய-தொழில்நுட்ப பசுமை இல்லங்களை உள்நாட்டு விவசாயிகள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் இலங்கையின் விவசாயத்தை மாற்றுவதில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு மிகவும் நியாயமான விலையில் வழங்குகிறது.

லஸ்ஸன அக்ரி இன்னோவேஷன்ஸ் மற்றும் லஸ்ஸன குழும நிறுவனங்களின்  தலைவரும் ஸ்தாபகருமான லசந்த மலவிகே  மேற்கோள் காட்டியது போல்  லஸ்ஸன அக்ரியின்  முதன்மையான நோக்கம் விவசாயிகளை வறுமையிலிருந்து மீட்டு நவீன விவசாயத்திற்கு மாற்றுவதுடன்உற்பத்தி திறனை விஸ்தரிப்பதற்கு  நிதி உதவிகளை வழங்குவதற்கான முன்கணிப்பு வருவாய் மாதிரிகளை வழங்குவதாகும். எனவேஇந்தத் திட்டம் தொழில்நுட்ப மற்றும் சிறந்த விவசாய நடைமுறைகளை வழங்குவதற்கு  முயற்சிக்கிறதுநுகர்வோருக்கு நியாயமான விலையில் உயர்தரபாதுகாப்பான உணவை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது..

இலங்கையின் நுகர்வோர் நீண்ட காலமாக அதிக விலை மற்றும் தரமற்ற உற்பத்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை நாடுகளை விட அதிக விலை கொடுத்தாலும், விவசாயிகள் இன்னும் வறுமையில் வாடுகின்றனர். லஸ்ஸன அக்ரியின் முன்முயற்சி நவீன விவசாயத்திற்கான தடைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் இந்த சுழற்சியை உடைக்க முயல்கிறது, குறிப்பாக நியாயமான விலையில் பசுமை இல்லங்கள் இல்லாத குறையை தீர்க்க முயல்வதை கூறலாம். அக்ரிபிளாஸ்ட்  ப்ரொடெக்டட்  கல்டிவேசன்  பிரைவேட்  லிமிடெட்  [Agriplast protected cultivation PVT LTD] உடனான இணைவானது மேம்படுத்தப்பட்ட பசுமை இல்ல  தீர்வுகளுக்கான கதவுகளைத் திறக்கிறது, அதிக மகசூல் மற்றும் பாதுகாப்பான உணவு உற்பத்தியை உறுதியளிக்கிறது

70 ஆண்டுகளுக்கும் மேலான ஒருங்கிணைந்த அனுபவத்துடன், கினிகர் அக்ரிப்ளாஸ்ட் 2.4 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு உதவி செய்து, விவசாயத் துறையில் மாற்றத்தை புகுத்தும் ஒரு கேம் சேஞ்சராக செயற்பட்டு வருகிறது. ஈர வைக்கோல் மற்றும் பசுமை இல்லங்களுக்கான உறைகள் போன்ற உயர்தர பாதுகாக்கப்பட்ட விவசாய பொருட்களுக்கு பெயர் பெற்ற அக்ரிபிளாஸ்ட்  ப்ரொடெக்டட்  கல்டிவேசன் பிரைவேட் லிமிடெட்   [Agriplast protected cultivation PVT LTD] பயிர் விளைச்சலை கணிசமாக அதிகரித்துள்ளதுடன்  நிலையான விவசாய நடை முறைகளை ஊக்குவித்துள்ளது. விவசாயிகளுக்கு கல்வியை  வழங்குவதற்கான அவர்களின் ஊக்குவிப்பு , லஸ்ஸன அக்ரியின் தொலைநோக்கு பார்வையுடன் தடையின்றி ஒத்துப்போகிறது.

லஸ்ஸன அக்ரி இன்னோவேஷன்ஸ் விவசாயிகளுக்கு சரியான தொழில்நுட்ப தீர்வுகளைத் தேர்ந்தெடுப்பதில் வழிகாட்டுகிறது, ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அதிக மகசூலுக்கான ஆதரவை வழங்குகிறது. திவுலப்பிட்டியில்   7 ஹெக்டேயர் பகுதியில் அமைந்துள்ள பசுமை இல்லத்தில் நாட்டிலேயே முதன்முதலாக உயர் தொழில்நுட்ப விவசாயத்திற்கான  அடைகாக்கும் மற்றும் அறிவுப் பகிர்வு மையத்தை ஆரம்பிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. லஸ்ஸன அக்ரி இன்னோவேஷன்ஸ்  இன் பிரதம நிறைவேற்றதிகாரி திரு பிரசாத் சேனதீரவின் கூற்றுக்கிணங்க இந்த மையம் புதிய நுழைவு மற்றும் விவசாய தொழில் முயற்சியாளர்களை  மேம்படுத்துவதுடன் அடுத்த தசாப்தத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பசுமை இல்ல விளைச்சலின் அளவை இரட்டிப்பாக்கும்.

விவசாய மாற்றத்துடன் ஒரு நிலையான எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கு தொழில்நுட்ப அறிமுகத்திற்கு அப்பால் லஸ்ஸன நிறுவனமானது  ஆர்&டி, பயிற்சி, அறிவு-பகிர்வு மற்றும் நுகர்வோர் நலனுக்கான விநியோகச் சங்கிலியை நெறிப்படுத்துவதில் தீவிர ஈடுபாடு ஆகியவற்றை செயற்படுத்தி வருகிறது..ஒரு அற்புதமான அடைகாக்கும் மையம் மற்றும் முக்கிய பங்குடைமைகளுக்கான  மூலோபாயத் திட்டங்களுடன்நவீன, நிலையான விவசாயத்தின் புதிய சகாப்தத்திற்கு இலங்கையை இட்டுச் செல்ல லஸ்ஸன  அக்ரி தயாராக உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT